Sunday, February 27, 2011

காதல் கசக்குதய்யா

இவ தான் நமக்குன்னு முத தடவையா ஒரு பொண்ணைப் பார்த்ததும் எப்படிடா தோணும்னு பசங்க கூட பேசிக்கிட்டு இருந்தோம்.ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி சொன்னாங்க.பல்ப் எரியும்,பாட்டு கேட்டும்,ஷாக் அடிக்கும்னு சொன்னதை எல்லாம் பாக்கும் போது நான் எங்க போய் சொல்லி அழுறதுன்னு தெரியாம நான் என்ன சொல்லி நக்கல் அடிக்கலாம்னு கண்ணை மூடி யோசிக்கிட்டு இருக்கும் போது தான் எனக்கு ஒரு பாட்டு கேட்க ஆரம்பித்தது. வார்த்தைகள் கேக்குறதுக்கு முன்னாடி பாட்டு நின்னுருச்சி.

"மச்சி எனக்கு பாட்டு கேட்டுச்சி..உங்களுக்கு ஏதாவது பாட்டு கேட்டுச்சா.." என்று பக்கத்தில் இருந்தவனிடம் கேட்டுக் கொண்டிருந்தேன்."இல்லடா..எனக்கு கேக்கலையே.." என்று அவன் சொல்லிக் கொண்டிருந்தான்.

"பஸ் ஏன் இங்க நிக்குது..இப்போ எங்க பொண்ணு ஏறிச்சி.."

"உனக்கு இதுல நம்பிக்கையே இல்லயே..அப்புறம் எவ ஏறினா என்ன.."

"ஒத்துக்கிறேன்..பாட்டு கேக்கும்,ஷாக் அடிக்கும்..வேறன்னடா பல்ப் எரியும் போதுமா..இப்போ சொல்லு.."

"அவ வேற காலேஜ் பொண்ணு..பஸ் மாறி ஏறிட்டா..இறங்கி போயாச்சி.."

"எனக்கு மட்டும் ஏண்டா மச்சி இப்படியெல்லாம் நடக்குது.." எரிச்சலா சொல்லிட்டு அது என்ன பாட்டுன்னு யோசிக்க ஆரம்பிச்சேன்.லிரிக்சை என்னால கண்டுப்பிடிக்கவே முடியல. அது இன்னும் எரிச்சல் வர காரணமாயிருந்தது.

நான் அதை அப்படியே மறந்துட்டேன். நாம காதலிக்கிற பொண்ணை விட நம்மள காதலிக்கிற பொண்ணு அப்படியெல்லாம் பஞ்ச் விடலாம் தான்.ஆனா இந்த வீணாப் போன மனசு ஏத்துக்க மாட்டேங்குதே. அசைண்மெண்ட் எழுத சோம்பேறித்தனம் பட்டப்போ அவ எழுதி தந்தா.

ஏன் எனக்கு எழுதி தர்றன்னு கேட்டதுக்கு எல்லாம் என் தலையெழுத்துன்னு சலிச்சிக்கிட்ட.அப்போ நீ அழகாயிருக்கேன்னு சொன்னேன்.இன்னொரு அசைன்மெண்ட் பாக்கியிருந்தது நினைவுக்கு வரல.

"இன்னொரு அசைன்மெண்ட் இருக்குல..அதுக்குத்தான் அப்படி சொல்றீயா.."

"உண்மையிலே அழகாயிருக்க.."

"பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காதாம்..என்னை விட்டு ஓடிரலாம்னு பாத்த கொன்னே போட்டுருவேன்.."

இப்படி எந்த கவலையில்லாம திரிஞ்ச நேரத்துல தான் ஒருத்தன் ஓடி வந்து "மச்சி உனக்கு வேவ்ஸ் ஒர்க் அவுட் ஆகுதுடா..உனக்கு பாட்டு கேட்டுச்சே..அந்த பொண்ணு நம்ம காலேஜ்ல சேர்ந்திருக்கா.."

"எந்த கிளாஸ்.."

"இ.சி.ஈ.."

அப்புறம் பாத்துக்கலாம்னு வழக்கம் போல கிளாஸ்ல தூங்கிட்டேன். "டேய் எழுந்திரு வேவ்ஸ் நம்ம கிளாஸ்கே வந்தாச்சி.."

"ஏன் அவளுக்கு வேலையே இல்லையா..ஒண்ணு பஸ் மாறி ஏறுறா..இல்ல கிளாஸ் மாறி போறா.." என்று
சலித்துக் கொண்டேன்.

வந்ததும் நான் உங்களுக்கு சாப்ட்வேர் இஞ்சினீரிங் எடுக்கிறேன்.அந்த லாஸ்ட் பெஞ் பசங்க அப்படியே பர்ஸ்ட் பெஞ்சுல உக்காருங்க.

"டேய் நம்மள தான் சொல்றாங்க.."

"முடியாது.."

"அவுட்.."

வெளியே போகும் போது கேட்டேன். "அந்த பொண்ணு இதானா.."

"ஆமாண்டா.."

"அப்புறம் ஏன் பாட்டு கேக்கல.."

"அது முத தடவை மட்டும் தான் கேக்கும்.."

"நீ வேணா ஒரு ரொமாண்டிக் லுக் விட்டு பாரேன்.."

"எப்படி கவுண்டமணி மாதிரியா.."

அன்னைக்கு ஆரம்பிச்சது.அதுக்கு அப்புறம் எல்லா கிளாஸ்லையும் வெளியே தான்.அவுட் ஸ்டாண்டிங் ஸ்டூடண்ட் ஆகிட்டேன். ஒருநாள் பொறுமையை இழந்து என்னை எல்.கே.ஜி பையன் மாதிரி நடத்தாதீங்கன்னு அவுட் ஸ்டாண்டிங்ல அவுட் டேக் மட்டும் போய் ஸ்டாண்டிங் மட்டும் இருந்தது. கிளாஸ்ல உள்ள நிக்க ஆரம்பிச்சிட்டேன்.

"ஒரு வேளை அந்த பாட்டு காதல் கசக்குதய்யா பாட்டாயிருக்குமோ.." எங்க குரூப் உள்ள நிக்கும் போது ஒருத்தன் கேட்டான்.

"இருக்கும் இருக்கும்.." கோரஸாய் எல்லோரும் சொல்ல

"ஏண்டா வெந்தப்புண்ல விரலை விடுறீங்க..ஏம்பா என்னை பாத்தா இவங்களுக்கு எப்படி தெரியுது.." சொல்லிக்கிட்டே மேல பாத்தேன்.

"என்ன உனக்கும் அவங்களை முன்னாடியே தெரியுமா..உங்க அஞ்சு பேரை மட்டும் இந்த வாட்டு வாட்டுது.."

"முத தடவையா ஒரு நாள் பஸ் மாறி நம்ம பஸ்ல ஏறிச்சே..அப்போ தான் நாங்க பாத்தோம்..வேற எதுவும் எனக்கு தெரியாது.." நல்லபடியா அந்த பாட்டு விஷயத்தை எடிட் பண்ணிட்டு சொன்னேன்.

"ஆமா அப்போ நான் கூட அவங்க பின்னாடியே ஏறினேன்..அப்புறம் இவங்களுக்காக இறங்க வேண்டியதா போச்சி.."

ஒருவேளை இவளை பாத்து பாட்டு கேட்டிருக்குமோன்னு ஒரு சந்தேகம். கேட்டா உதை விழுமே. "என்னை முத தடவை பாக்கும் போது உனக்கு ஏதாவது பாட்டு கேட்டிச்சா.." கேட்டுட்டு அவளையே பாத்தேன்.

"காதல் கசக்குதய்யா பாட்டு கேட்டுச்சி.."

அது எப்படிடா என்னை மட்டும் ஊர்ல ஒருத்தன் விடாம லந்தைக் கொடுக்கிறான்களோன்னு தெரியலைன்னு நினைச்சிக்கிட்டேன்.

பாட்டுக்கான பொண்ணை கண்டுப்பிடிச்சாச்சி.பாட்டு தான் தெரியல. அப்புறம் எல்லாம் இல்லாம போன ஒருநாளில் தம்பி வந்து சொன்னான்."கண்ட நாள் முதலாய்னு ஒரு படம்..உனக்கு ரொம்ப பிடிக்கும்..பாரு"

படம் பார்த்துட்டு வரும் போது தான் அந்த பாட்டு கண்ட நாள் முதலாய் இருக்குமோன்னு நினைச்சேன். ஆனா படத்துல லைலா பிரசன்னாவும் மாற்றி மாற்றி அடித்து கொள்வார்கள்.லைலா அப்பா ஒரு பேக்கு. என்னை விட்டுரு பிரசன்னா கெஞ்சுவார். இப்படி எல்லாம் முரணாயிருந்தால காதல் கசக்குதய்யா பாட்டு தான் கேட்டுக்குணும்னு இப்போ நான் நம்புறேன்.