Thursday, February 24, 2011

கண்ணில் தெறிக்கும் வானம்

விடியகாலை ஆறு மணிக்கே மொபைல் அடித்து தள்ளியது.ஆறு முறை எடுக்காமல் அமர்த்தி விட்டேன். இது இடைவெளி குறைகின்ற தருணம் என்ற ரிங்டோனிற்கு ஏற்ப ஒரு வழியாக இடைவெளியை குறைத்து கண்ணைத் திறக்காமலே எடுத்து பேசி விட்டேன்.

"காலங்காத்தாலே எதுக்குடா என் உயிரை வாங்குறீங்க.." கத்தினால் "உன்னை உடனே பாக்கணும் வா.. கோவிலுக்கு வா.." பதிலுக்கு ஒரு கத்தல்.

செமஸ்டர் ரிசல்ட் எதுவும் வந்து விட்டதா அரியர் எதுவும் விழுந்து விட்டதா என்று வயிற்றில் லேசாக புளியைக் கரைத்தது.

யாருக்கும் தெரியாமல் தொண்ணூறுகளின் மிச்சமான டிவிஎஸ் சுசூகியை நகர்த்தினால் "என்ன ஆறு மணிக்கே வண்டி எடுக்கிற..ரிசல்ட் வந்துரிச்சா.." உள்ளே இருந்து குரல் வருகிறது.

"இல்ல பால் வாங்கிட்டு வர்றேன்.." என்று பதிலுக்கு காத்திருக்காமல் வண்டியை எடுத்தால் "அரியர் வைச்சிட்டு ரீ வால்யூவேஷன் காசு வாங்க எங்கிட்ட வராதே.."

"அட ராமா..சும்மாயிருங்க..நேத்து தான் எக்சாம் எழுதியிருக்கிறேன்..அதுக்குள்ள ரிசல்ட் வந்துரப் போகுது.."

அங்கே போய் கோவில் வாசலில் பிங்க் கலர் சுடிதாரில் நிற்கும் பிகரை சைட் அடித்து கொண்டிருந்தால் "கூப்பிட்டது நான்..பாக்குறது அங்கேயா.." குரல் கேட்டது.

"அதெல்லாம் இல்லயே.." மேலும்கீழுமாய் ஒரு மாதிரி தலையை ஆட்டி சைட் அடித்ததை உறுதி படுத்தினேன்.

"சரி இன்னைக்கு என்ன நாள்.."

"சனிக்கிழமை..இது கேக்கத்தான் வர சொன்னியா.."

"வேற ஒரு நாளும் இல்லையா.."

"இல்லையே..என்ன நாள்.."

"என் பிறந்த நாள்..ஒரு கிப்ட் தான் தரல..போன் பண்ணி சொன்னாத்தான் என்ன கேடு.." கோவில் அர்ச்சனையும் மீறி இவ அர்ச்சனை தான் காதில் நிரம்பி வழிந்தது.

"சொல்லவேயில்ல.."

"சரி வர சொன்னா..நேத்து போட்ட ஷாட்ஸ்,சட்டையில பட்டன் இல்ல..குளிக்கல சரி அட்லீஸ்ட் மூஞ்சு கழுவிட்டு வந்தா தான் என்ன.."

"நீ தானே அவசரமா வர சொன்ன.."

"இதெல்லாம் நல்லா சமாளி..பிறந்தநாள்னு சொன்னப்பின்னாடியும் வாயைத் திறந்து பதில் ஹேப்பி பர்த்டேன்னு சொல்ல மாட்டியா..எல்லாம் கேட்டு வாங்கணுமா.."

"பல்லு தேய்க்கலையேன்னு பாத்தேன்.."

"நீ எல்லாம் வேஸ்ட்..என் ஸ்கூல் பிரண்டு பனிரெண்டு மணிக்கு போன் பண்ணி சொன்னான் தெரியுமா.."

"சரி நான் வேஸ்ட் தான் விடு.."

"கோபம் மட்டும் பொத்துக்கிட்டு வந்துரும்..அவன் கிப்ட் எல்லாம் தந்தான் தெரியுமா.."

சும்மாவே நாக்குல சனி புட் போர்ட்ல டிராவல் பண்ணும்.பல்லு வேற தேய்க்கலையா சம்மணம் போட்டு உட்கார

"போய் அவனையே கல்யாணம் பண்ணு..என்னை ஆளை விடு.."

கோபத்துல இந்த பொண்ணுங்களுக்கு எப்படித்தான் இங்கீலிஸ் வருமோ தெரியல.என்ன என்னமோ திட்டிட்டு கடைசியா மூணு வார்த்தை சொன்னா.

"என் மூஞ்சிலே முழிக்காதே.."

"சரி.." என்று சொன்னதும் கோபித்து கொண்டே போனவளிடம் குடுக்க வைத்திருந்த கிப்டை தேடினால் காணவில்லை.

கொஞ்ச நேரம் கழித்து இது இடைவெளி குறைகின்ற தருணம் என்று மொலைல் சிணுங்க வண்டியோட்டிக் கொண்டே எடுத்தால் "ஐ ஹேட் யூ.." என்று போனில் கத்துகிறாள்.

2 comments:

மதுரை சரவணன் said...

அருமை .. வாழ்த்துக்கள்

Muruganandan M.K. said...

பிறந்தநாளை மறந்தால் எப்படிக் கோபம் வருகிறது இவர்களுக்கு.
Yahoo or hotmail ல் reminder பெறத் தெரியாத மங்குணியாக இருக்கிறானே.