ஜெகன் - அவன் பெயர் மட்டும் அல்ல அவன் தான் ஜெகத்தை ஆள வேண்டும் என்று நினைப்போடு வாழ்பவன். திறமைசாலி ,அழகன் , இன்னும் சொல்ல போனால் என்னுடைய நண்பன்(இதை விட ஒரு தகுதி வேண்டுமா சொல்லுங்கள்).
சிறுவயதில் இருந்தே ஏதாவது ஆராய்ந்து கொண்டே இருப்பான். வெற்றி பெறுகிறதோ இல்லையோ விஞ்ஞானத்தோடு வியாக்கியானம் பேசுபவன்.
பெரும் பணக்காரரின் மகளைத் திருமணம் செய்து கொள்ள மேலே கூறிய தகுதிகளே போதுமானதாக இருந்தது. ஆராய்ச்சி வெற்றி பெற்றால் கிடைக்கும் பெரும் ஆதாயத்தை நினைத்தே அவர் இவனுக்கு பெண் கொடுத்து இருந்தார்.சொல்ல மறந்துட்டேன்.அவன் மனைவி பேர் மோகினி.
தொடர்ந்து நடந்த முயற்சியில் அவரது பணம் மட்டும் தான் கரைந்து இருந்தது.அவன் மனம் கரையவில்லை.மனைவியின் வெகுளிதனத்தைப் பயன்படுத்தி பணம் தேவைபடும் அளவு வாங்கி கொள்வான்.அவன் நோக்கம் எல்லா பேர் தெரியாத நோய்களையும் தடுக்கும் மருந்தைக் கண்டுப்பிடிப்பது.குறிப்பாக எய்ட்ஸ்.இதை சொன்னவுடன் தான் அவருக்கு ரொம்ப சந்தோஷம்.(ஒருவேளை அவருக்கு இருக்குமோ..அடப்பாவி இது தான் கேரக்டர் அஸாசினேஷன்..)
இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்தது.வாய் தகராறு விரைவில் அடித்து கொள்ளும் கட்டத்தை எட்டும் என்று மட்டும் தோன்றியது.
சில வாரங்களுக்குப் பிறகு
ஜெகன் தொலைபேசியில் அழைத்து பதற்றமாக பேசினான்."மச்சான்..சீக்கிரம் லேப்புக்கு வா..ஒரு சிக்கல்.."
போய் பார்த்தால் லேப் முழுவதும் அலங்கோலமாக கிடந்தது.இருவரும் சேர்ந்து சரி பண்ணா ஆரம்பித்தோம்.தூரத்தில் ஒரு மனிதகுரங்கு மயங்கி கிடந்தது.
"ஜெகன் என்ன ஆச்சு.."
"எல்லாம் அந்த குரங்கு பண்ண வேலை..அட்டகாசம் செய்து இப்படி அலங்கோலம் ஆகி விட்டது.."
"உங்க மாமனாருக்கு தெரிஞ்சா என்ன பண்றது.." என்று சொன்ன என்னை அவன் சட்டை செய்யவில்லை.
கொஞ்ச நாள் கழித்து அந்த குரங்கை எடுபிடி வேலைக்கு பழக்கியிருந்தான்.அதுவும் கூடமாட வேலை செய்தது.
"மச்சான் காபி வேணுமா.."
அந்த குரங்கே தயார் செய்து கொண்டு வந்தது.காபி குடித்தால் சக்கரை இல்லை..
"ஜெகன் சக்கரை இல்லை.."
கோபத்தில் அந்த குரங்கை அடிக்க ஆரம்பித்தான்.தடுக்க சென்றவன் அவன் சொன்னதைக் கேட்டு நின்று விட்டேன்.காரணம் அவன் அந்த குரங்கை அடிக்கும் போது அதை அவன் மாமனார் பெயரை சொல்லி சொல்லி அடித்து நொறுக்கி விட்டான்.எனக்கு இருந்த சந்தேகம் வலுத்தது.
"ஜெகன் இது உங்க மாமாவா.."
"ஆமாடா..உனக்கும் உண்மை தெரிந்து விட்டது..உன்னையும் மாத்தி விட வேண்டியது தான்..வேலை செய்ய இன்னும் ஒரு குரங்கு கூடியிரும்.."
"ஜெகன் வேணாண்டா..இது சரியில்ல.." என்று ஓட முயற்சிக்கும் போது பிடித்து விட்டான்.
"மோகினி அந்த ஊசியை எடுத்துட்டு வா.." என்று கத்த ஊசி கொண்டு வந்த மோகினியும் குரங்காக மாறியிருந்தாள்.அவளையும் மாற்றியிருக்கிறான்
ஆனால் அவனிடம் ஊசியை கொடுக்காமல் அவனை அந்த பெண்குரங்கு குத்தி விட்டது.ஜெகன் என் கண் முன்னாலே ஒரு குரங்காக மாறியிருந்தான் இல்லை மாறியிருந்தது.(மட்டமான கிராபிக்ஸ் படம் பார்த்தது போல் ஒரு உணர்வு)
ஒரு மாதம் கழித்து.. வண்டலூர் ஜூவில்..
அந்த ஊழியர் என்னிடம் சொல்லி கொண்டு இருந்தார்."நீங்க போன் பண்ணி சொன்னாதாலே நாங்க எல்லாத்தையும் பிடிச்சி இங்க கொண்டு வந்துட்டோம்..அந்த சின்ன ஆண் குரங்கு எப்போ பார்த்தாலும் எதையாவது நோண்டுது..பெரிய ஆண் குரங்கு கிட்ட ஏதோ கேக்குது..உடனே இரண்டும் சண்டை போடுது..அந்த பெண் குரங்கு யார் பக்கம் போறதுன்னு தெரியாம முழிக்குது.."
"சரி இங்க வந்தப்பிறகும் பணம் கேக்குறத நிறுத்தல போல.." என்று நினைத்து கொண்டு "ஒரு குட்டி குரங்கு வந்தா எல்லாம் சரியாயிடும்.." என்று அவரிடம் சொன்னேன்.
"சார் நீங்ககளே ஒரு பெயர் வைங்க.." அவர் சொல்ல..
"ஜெகன்.." என்று என் வாய் அனிச்சையாக முணுமுணுத்தது.
"ரொம்ப நல்ல பெயர்..இந்த ஜூவையே இது ஆளும் சார்.." என்று சொல்லி கொண்டு நகர்ந்தார்.
ஜெகன் என்னை பார்த்து கொண்டேயிருந்தது. நான் திரும்பி பார்த்தேன்."இது நீ இருக்க வேண்டிய இடம்.." என்று சொல்வது போல் இருந்தது.
Thursday, February 10, 2011
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
kathai arumai. vaalththukkal
//இன்னும் சொல்ல போனால் என்னுடைய நண்பன்(இதை விட ஒரு தகுதி வேண்டுமா சொல்லுங்கள்).//
ரொம்பத்தான் தன்னடக்கம் உங்களுக்கு.
//நான் திரும்பி பார்த்தேன்."இது நீ இருக்க வேண்டிய இடம்.." என்று சொல்வது போல் இருந்தது.//
இலேசான நகைச்சுவை உங்களுக்கு நன்றாகவே வருகிறது.
நல்ல நகைச்சுவைக் கதை.
Post a Comment