Thursday, June 10, 2010

சாரு,மிஷ்கின் - சொல்வார்கள் இன்னும் சொல்வார்கள்

ஆறு மாதங்களுக்கு முன்

சாரு - "நந்தலாலா மாதிரி ஒரு படம் நான் பார்த்ததே இல்லை.."

இரும்புத்திரை - "நான் கூட பார்த்ததேயில்லை..ஜப்பான் மொழியில் அந்த படம் இருக்கிறது என்று தெரியும் வரை.."

மிஷ்கின் - "நான் சாருவுடன் சேர்ந்து குடிக்க ஆசைப்படுகிறேன்.."

சாரு - "நான் யுத்தம் செய் படத்திற்காக ஹெவி பிராக்டிஸ் பண்றேன்..இது மாதிரி எந்த தமிழ் எழுத்தாளனால் ஸ்டெப் போட முடியுமா..குறிப்பாக அந்த.."

மிஷ்கின் - "இளையராஜாவிற்கு என் மேல் கோபம் அவர் குடுத்த ஆறு பாடல்களில் நாலு பாடல்கள் படத்திலே இல்லை.."

ஆறு மாதங்களுக்குப் பின் படத்தில் சரியாக அந்த காட்சி மட்டும் காணாமல் போனால்

சாரு - "எனக்கு இன்னும் பேமண்ட் வரலை.."

சாரு - "என் முகத்தை மக்களுக்கு காட்டும் ஆசையில் தான் இப்படி எல்லாம் செய்கிறேன்..அதை தவறாக பயன்படுத்திக் கொண்டார்கள்.."

மிஷ்கின் - "அது படத்தொகுப்பில் ஏற்பட்ட கோளாறு..இளையராஜா பாடல்களே எடுத்து விட்டேன்.."

இரும்புத்திரை - "கொஞ்சம் அதை தான் கண்ணில் காட்டுங்களேன்.."

பதிவர்கள் - (யூ டுயூப் இணையத்தில் வெட்டப்பட்ட காட்சியை எடுத்து) பாருங்கள் சாருவுக்கு டான்ஸ் ஆட வரவில்லை.

சாரு - "நான் டான்ஸ் மாஸ்டரை நம்பினேன்..அவர் சரியாக செய்யவில்லை நானா பொறுப்பு.."

நீயா நானா கோபி - "சாரு நீங்கள் யுத்தம் செய் படத்தில் ஆடி உங்களுடைய வாசகர்களை நடனப் பள்ளிக்கு செல்ல தூண்டியதற்கு மன்னிப்பு கேட்பீர்களா.."

ஆண்டனி - "விடாதே..டோண்ட் லீவ் ஹிம்.."

சாரு - "ஆமாம் தவறுதான்.."

பதிவர்கள் - "சாரு மன்னிப்பு கேட்டு விட்டார்.."

சாரு - "மஞ்சள் சேலை கட்டிக் கொண்டு டான்ஸ் ஆடும் படம் எடுத்தால் உலகத்தரம் ஆகி விடுமா.."

சாரு - "எனக்கு அடுத்த படத்தில் நாயகன் வேஷம் தருவதாக சொன்னார்.. அதற்காகவெல்லாம் இந்த படத்தை பாராட்ட முடியுமா.."

ஹரன் பிரசன்னா - "சாரு பாராட்டி அவர் வாயில் வாங்கி கட்டி கொள்ளும் ஐந்தாவது இயக்குனர் மிஷ்கின்.. முன்னர் செல்வராகவன்,வசந்த பாலன்,அமீர்,சசிகுமார்.."

இட்லிவடை - "நன்றி ஹரன் பிரசன்னா"

லக்கி - "நன்றி அதிஷா நல்ல பதிவு.."

அதிஷா - "நன்றி லக்கி நல்ல பதிவு.."

மன்னிப்பு கேட்காதே (1)..

மன்னிப்பு கேட்காதே (2)

மன்னிப்பு கேட்காதே (3)

மன்னிப்பு கேட்காதே (4)

மன்னிப்பு கேட்காதே (5)

மன்னிப்பு கேட்காதே (6)

மன்னிப்பு கேட்காதே (7)

மன்னிப்பு கேட்காதே (8)

தொடரும்

தொடரும்

தொடரும்

தொடரும்

பதிவின் நீதி - உலகம் ஒரு உருண்டை அல்லது வட்டம்.

Tuesday, June 8, 2010

பரிந்துரை வடப் போச்சே - இனி பதிவு முகப்பில் தொடர்ந்து தெரிய

என்னை மாதிரி சின்னப்பசங்க சொன்னா யாருமே காது கொடுத்து கேக்குறதேயில்லை.போட்ட சண்டையால பரிந்துரை போச்சு.இப்பவாது நான் சொல்றதை கேளுங்க.முகப்பில் தெரிந்து கொண்டேயிருக்கலாம்.

நமக்கு யாருமே பின்னூட்டம் போடலையேன்னு வருத்தப்பட்டு மூலையில் முடங்கி விடக்கூடாது.நமக்கு நாமே திட்டம் மாதிரி பத்து நிமிஷத்து ஒருமுறை நமக்கு நாமே திட்டத்தில் பின்னூட்டம் போடணும்.ஒரே பெயர்ல போட முடியலையா வேற வேற பெயர்ல போடணும்.நம்ம பதிவு முகப்பில் தெரிந்து கொண்டேயிருக்கும்.இல்லை யாருக்காவது பின்னூட்டம் போடலாம்.டெரர் மாதிரி பின்னூட்டம் இருக்கணும்.அப்படி பதிவைப் படிக்கிற கூட்டம் புரோபைல் வழியா நமக்கு வந்துரும்.இப்படி வழியிருக்கான்னு ஆச்சர்யப்படக் கூடாது.அதனால் யாருக்காவது பின்னூட்டம் போட்டுகிட்டேயிருந்தா வேலை போயிரும்.பின்ன முழு நேரமா அதே வேலையை செய்யலாம்.

இன் முழு பதிவும் ஒரே தடவையில் எழுதுறதை விட ஒவ்வொரு பத்தியா தனித்தனி பதிவா போடலாம்.(உண்மைத்தமிழன் அண்ணன் இந்த மாதிரி போட்டியில் ஜெயிப்பார்.அதனால் கப்பை தனியா எடுத்து வைத்து விடவும்).சரி அவர பீர் பண்ண ஒரே வழி தான்.ஒவ்வொரு வரியா பதிவு போடலாம்.பதிலுக்கு அவரும் போட்டா என்னவாகும்.

இல்லை லேபிள் இப்படி வைங்க - அனுபவம்,நையாண்டி,மொக்கை,நகைச்சுவை,நிகழ்வுகள்,சினிமா,திரைப்படம்,விமர்சனம்,சமையல்,கவிதை, சிறுகதை,அரசியல்,சமூகம் - இப்படி தமிழ்மணத்தில் தெரியும் குறிஸ்சொல்லை எல்லாம் நம்ம லேபிளில் போடணும்.சினிமாவுக்கு தனியா தமிழ்மணம் ஒரு பக்கம் ஒதுக்கி இருக்காங்க.அதை தூக்கிற வரைக்கும் நாம ஒயக்கூடாது.

பாஸ் தமிழிஸ்ல பிரபலம் ஆக என்ன வழியா எல்லாத்தையும் நானே சொல்லணுமா.ஒரு பத்து பெயர்ல ஐடி கிரியேட் பண்ணுங்க.ஓட்டை குத்துங்க.

இன்னும் ஒரு வழி இருக்கு - தமிழிஸ்ல டிரெண்டுக்கு ஏத்த மாதிரி குறிச்சொற்கள் மாறும்.உதாரணம் சச்சின்,சிங்கம்,சுறா,நித்யானந்தா இப்படி அதனால பதிவு தலைப்பு இப்படி வைக்கணும்.சிங்கம் எழுதும் பரிந்துரை வடப் போச்சே - இனி பதிவு முகப்பில் தொடர்ந்து தெரிய அல்லது சிங்கம் - பரிந்துரை வடப் போச்சே - இனி பதிவு முகப்பில் தொடர்ந்து தெரிய இப்படி வைக்கணும்.அவசரக்குடுக்கை மாதிரி நித்யானந்த எழுதும் பரிந்துரை வடப் போச்சே - இனி பதிவு முகப்பில் தொடர்ந்து தெரிய அப்படி வைச்சுக்கிட்டு மிதி வாங்க கூடாது.அடுத்த் வார டிரெண்ட் ராவணன்.எழுதப் போகும் எல்லா பதிவின் தலைப்பிலும் ராவணன் என்றே வைக்கவும்.

பிரபலம் ஆகணும் என்ற ஆசையில் எல்லா திரட்டியிலும் இணைக்க ஆசைப்படக்கூடாது.அப்புறம் உள்ளதும் போச்சடா நொள்ளைக் கண்ணா மாதிரி பதிவு மட்டுமல்ல உங்க ப்ளாக்கே போயிரும்.

இதை படிச்சுட்டு இதே மாதிரி எல்லாம் பண்ணாதீங்க.எதையும் ப்ளான் போடாம பண்ணப்புடாது.

Friday, June 4, 2010

வினவு போடும் ரெட்டை வேடம்

வினவு இன்றைய பதிவில் சொன்னது இது - சந்தனமுல்லை விவகாரம் எழும்புவதற்கு முன் நர்சிம் என்பவர் யார் என்றே எங்களுக்குத் தெரியாது என்பதே உண்மை.நன்றாக கவனிக்க வேண்டும் "எங்களுக்குத் தெரியாது" என்று சொல்லியிருக்கிறார்.

அது எந்தளவு உண்மை என்று பார்ப்போம்.அவருடைய விண்ணைத் தாண்டி வருவாயா பதிவில் ரியல் என்கவுண்டர் என்ன  சொல்கிறார் என்று பார்த்தால் - " ரியல் என்கவுண்டர் says: March 1, 2010 at 4:02 pm //நளினி ஸ்ரீராம்…இந்தப் படத்தைப் பொறுத்தவரை இவரின் பங்கு மிக முக்கியமானது. உடைகள் வடிவமைப்பு இவர்தான். த்ரிஷாவையும் சிம்புவையும் இதைவிடச் சிறப்பாகவும் அதி முக்கியமாக சிம்ப்பிளாகவும் காட்டியதால் தான் இந்தப் படம் சொல்ல வந்த காதல் மனதோடு ஒன்ற வைத்தது.// பதிவர் நர்சிம் தனது பதிவில் தெரிவித்த முத்துக்கள் இவை. ஆக காதலிக்கணும்னா ஒரு நல்ல டிசைனரைப் பாத்து டிரெஸ்ஸுகளை செலக்ட் பண்ணிக்கணும், முருகா…………முருகா…………….!!!!!!!!!!!!!!!!!.."

சாரு - நித்யானந்தா பற்றிய பதிவில் அதே ரியல் என்கவுண்டர் என்ன சொல்கிறார் என்றால் "நித்தியானந்தாவின் பரம பக்தன் சாருவின் சிஷ்ய கோடிகள் லக்கி லுக், அதிஷா, நர்சிம், கேபிள் சங்கள் இத்யாதிகள் சாருவை கடவுளாக தூக்கிப்பிடித்து பதிவுலகில் டான்ஸ் போட்டார்கள். அவர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பது சரியா, இல்லை சட்டையைப் பிடித்து கேள்வி கேட்பது சரியா, இல்லை உதைப்பது சரியா? ஒரு நல்ல பதிலைச் சொல்லுங்கள்..."

இந்த ரியல் என்கவுண்டர் யார் என்றால் நிச்சயம் வினவின் தோழர் தான்.இல்லை என்று மறுக்கவே முடியாது.மறுக்க சொல்லுங்கள் பார்ப்போம்.கேபிள் சங்கர்,வெற்றி,விக்னேஷ்வரி என்று அவர் தாக்கிய பதிவர்கள் ஏராளம்.

அதற்கு என்னுடைய எதிர்வினை இங்கு படிக்கலாம்.

அடுத்து பெண்களுக்கு எதிராக வன்முறை நடக்கும் போது தெருவில் போகும் யாரும் தட்டிக் கேட்பார்கள் என்று முகிலிடம் சொன்னாலும் லீனா மணிமேகலை என்பவரை பூக்காரி என்று எழுதிதையே அசிங்கம் என்று சொல்லும் வினவுத் தோழர்கள் அதை விட பத்து மடங்கு திட்டினார்களே.அப்போது யாரும் வினவிற்கு வார்த்தைக்கு வார்த்தை பொறுக்கி பட்டம் தரவில்லையே.

வினவுத் தோழர்கள் எந்த அளவிற்கு தரமிறங்கி போவார்கள் என்பதற்கு என் பதிவில் வந்த பின்னூட்டமே சாட்சி.

சொல்லியது யார் என்று பார்த்தால் - வானமே எல்லை என்று பெயர் வைத்திருக்கும் குறுகிய சிந்தனை உள்ளவர்.அந்த பின்னூட்டம் இதோ.

"பன்னடை, பர்தெசி, லூசுப்பய, கேனப்.......பயல், என்னமா எழுதி இருக்கான், மானிடகுல சீர்கேடு, தமிழ்பதிர்வகளின் தற்குறி, குலநாச சண்டாளன், இழி பிறப்பின் அளவுகோள், பொது அறிவிலி, மலம் கொண்டு சாலை அமைப்பவன், கேவலன், காமுகன், புழு, வைரஸ், ஆட்கொள்ளி, அடியாள், பாதில போறவன்,"

இவ்வளவு நடந்தப் பின்னும் நான் வினவுத் தோழர்கள் என்று இன்னும் மரியாதையோடு விளிக்கிறேன். நான் அவரை பற்றிய சுயபிராதம் என்று தான் இதுவரை நினைத்துள்ளேன்.இன்னும் நினைக்கிறேன்.

யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்பேன் என்று சொல்லும் வினவு - தீபா எழுதிய அவலத்தினாலான பெண்வாழ்வு மீள்வது எப்போது பதிவில் ஒரு அனானி போட்ட பின்னூட்டத்தைப் பார்ப்போம். "ஐயா வினவு நிஜமாக பெண்ணுரிமை என்று வஸ்து அல்லது ஜந்து உயிரோடு இருக்கிறதா.நீங்கள் சொல்லுங்கள்.பெண்கள் வாரமல்லவா.இதை படித்து விட்டு சொல்லுங்கள்.சொல்ல முடியவில்லை என்றால் நான் பின்னூட்டம் போட்ட பெயருக்கு மாறி விடவும். அதற்கு வினவுத் தோழர்கள் மணி மற்றும் அரடிக்கெட்டின் பதிலைப் பார்ப்போம். # March 11, 2010 at 9:04 pm உரிமை என்பது வஸ்துவா/ஜந்துவா .. எப்படி என புரியவில்லை அம்மா கொஞ்சம் விளக்க முடியுமா .. Reply # 11.2 அர டிக்கெட்டு! says: March 11, 2010 at 11:08 pm மதார், உங்க பதிவ விளம்பரப்படுத்த வினவ பயன்படுத்தறீங்க சரி. உங்க பதிவு கள்ள ஓட்டு குழுக்களை பற்றிய பதிவு.  அந்த முதுகு சொறியும் கழிசடை பரஸ்பர ஓட்டு கும்பலை நீங்கள் பெயர் சொல்லி அம்பலப்படுத்தியிருந்தாலாவது மெச்சியிருக்கலாம்,நீங்களோ பொதுவாக நீதி சொல்வது போல பதிவு எழுதி சொதப்பி விட்டீர்கள். சரி போகட்டும். உங்களோட இந்த பதிவுக்கும் பெண்ணுரிமைக்கும் என்ன சம்பந்தம்? அது என்ன பெண்ணுரிமையை வஸ்து, ஜந்து என்ற கிண்டல்? ஏன் வினவு ஏன் பேர வினாவதேன்னு மாத்தனும்?  நீங்க பெண்ணுரிமையை ஜந்து பொந்துன்னு எழுதறத பாத்தா நீங்க ஆணாதிக்க கருத்து கொண்ட பதிவர் மாதிரி தெரியுதே!!!!!!!!!!

கள்ளவோட்டு கும்பலின் பெயரை சொல்லுங்கள் என்று அன்று சொன்ன வினவுத் தோழர்கள் இன்று என்ன சொல்கிறார் என்று பார்த்தால் கேள்விக்குறி என்ற தோழர் -  "இதுவரை மைனஸ் ஓட்டு குத்திய புண்ணியவான்கள் ramjiyahoo ,  cnu77(சீனு நல்ல பேரு)..".ஓட்டு யார் போடுவது என்று பார்ப்பது தான் வேலை.

வினவு சொல்கிறார் - "இன்று, “பூக்காரிகளுக்கும் சுய மரியாதை உண்டு“ என்ற முல்லையின் பதிவுக்கு தமிழ்மணத்தில் மைனஸ் ஓட்டு குத்தித் தள்ளுகிறார்கள் சில ஐந்தாம்படைப் பேர்வழிகள். இவர்கள் சிறுபான்மை என்றாலும் இதுவும் பதிவுலக நாகரிகத்தின் இலட்சணம்தான்." எனக்கு மைனஸ் குத்தியவர்களை கூட நான் இப்படி திட்டியது இல்லை.புரிகிறதோ வினவுத் தோழர்களின் யோக்கியதை.இவர்களுக்கு குத்திவே கூடாது என்றால் ஐயா நீங்கள் தமிழ் மணம் பட்டையை சேர்க்க கூடாது.

வினவுத் தோழர்களின் ஓட்டு விவகாரத்தை கிழித்தெறிந்த தோழர் உடன் பிறப்பின் பதிவு இங்கே.

அது பொறுக்க முடியாமல் திரும்ப மோதி இன்னும் முகத்திரையை கிழித்து கொண்ட தோழர் உடன் பிறப்பின் பதிவு இங்கே.

வினவு எப்படி ஓட்டு வாங்குகிறார்கள் என்று இப்போது தெரிகிறதா.

சந்தனமுல்லை சொன்னது இங்கே - ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறையும் பெண் பதிவர்கள் பதிவுலைகை விட்டு துரத்தப் படுகிறார்கள்.நிச்சயம் கிடையாது.அது ஆறு மாதத்திற்கு ஒரு முறை கிடையாது.மாதம் ஒருமுறை.அப்படி என்றால் மே மாதம் வெளியே சென்ற பெண் பதிவர் யார் என்று பார்த்தால் - கிருபாநந்தினி.போவதற்கு யார் பெயரை சொல்லியிருக்கிறார் என்று பார்த்தால் நீங்களே பாருங்களேன்.

அந்த தோழி உடல் நலன் பெற என் வேண்டுதல்கள் நிச்சயம் உண்டு.அப்போது ஏன் வினவு கேட்கவில்லை.கேட்க மாட்டார்களே.அதிலும் ஜாதி இருக்கிமோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.நீயே இப்படி சொன்னால் என்று கேட்டு அதிர்ச்சி அடைய கூடாது.எல்லாம் வினவு கற்றுத் தந்த பாடம் தான்.

வினவு எல்லோருக்குமாக போராடுங்கள்.பாரபட்சம் காட்டுவது,ஜாதியை சொல்வது,நாங்கள் தான் எழுதினோம் என்று சத்தியம் செய்வது எல்லாம் வேண்டாம்.

கடைசியாக குழலி கிழித்தெறிந்த மிச்ச மீதி முகத்திரை இங்கே.

நான் ஏற்கனவே சொல்லி விட்டேன்.உங்களுக்கு நாட்டாமை வேடம் பொருந்தாது என்று.காரணம் நீங்கள் ஒரு சார்பு உடையவர்கள்.உங்களை நம்பி வலையுலகம் உங்கள் பின் வந்தால் குரங்கு அப்பம் பங்கு வைத்த கதையாகி விடும்.அப்பம் பங்கு வைத்த கதையை நர்சிம் விவகாரத்தில் இருந்து ஆரம்பிக்க நினைத்தீர்கள்.குழலி வேட்டு வைத்து விட்டார்.போய் மக்களுக்காக போராடுங்கள்.

பதிவர்களே வினவு பின்னால் போனால் நாளை உங்களுக்கும் மங்களூர் சிவா நிலை தான் வரும்.

இன்னும் இருக்கிறது.வேண்டும் என்றால் தருகிறேன்.

Thursday, June 3, 2010

ஒண்டிப்புலியும் ஒண்டரை அணா இலக்கியமும்

இந்த கதையோட நாயகனே ஒ.மா.ஒ.ச ஒண்டிப்புலி தான்.பெயரைப் பார்த்து அவர் ஒண்டியா புலி பிடிக்க போவாரா என்று கேட்டால் உங்களை பார்த்து சிரிப்பதை தவிர வேறு வழியேயில்லை.அது சரி அது என்ன ஒ.மா.ஒ.சன்னு பாத்தா ஒரு மாசத்துக்கு ஒரு சண்டை தான் நம்ம ஒண்டிப்புலி இழுப்பார்.

ஒண்டிப்புலிக்கு முதல் ஜென்மம் எடுத்தவுடனே தெரிஞ்சிப் போச்சி.அவரோட ஏழாவது ஜென்மத்தில் ஏழாவது அறிவை கொண்டு (அதென்ன ஏழாவது அறிவு ஒவ்வொரு ஜென்மத்துக்கும் அறிவு தனித்தானே.எனக்கு இப்படித்தான் சொல்ல வரும்.நோ மோர் கிராஸ் குவெஸ்டீன்ஸ். அப்புறம் எனக்கு கதை கோர்வையா சொல்ல வராது) அவர் பெரிய எளுத்தாளர்,இலக்கியவியாதியா வருவார்னு புரிஞ்சிப் போச்சி.யாருக்கு அவருக்கு தான்.

இலக்கியத்தைப் பற்றி கேளுங்கள்.ஒண்டிப்புலி சொல்வார்.இலக்கியமாக பே.கிறோம்,இலக்கியமாக நடக்கிறோம்,இலக்கியமாக இன்னும் றோம்,ம் என்று தொடர்ந்து கொண்டே போனால் அது ரோம் வரை நீண்டு விடும்.

அவர் கவிதையே கொஞ்சமென்ன நிறைய வித்தியாசமாக இருக்கும்.

குவாட்டர் அடி
குப்புறப் படு
வாந்தி எடு
வாயைத் துடை

இப்படி ஒரே வரியில் எழுத வேண்டியதை நாலு வரியில் எழுதலாம் என்று முதல் ஜென்மத்தில் தெரிந்தோ இல்லை இரண்டாம் ஜென்மத்தில் தெரிந்ததோ அது இதுவரைக்கும் யாருக்கும் தெரியாத இரகசியம்.

எப்பவுமே இப்படி மொக்கையாகத் தான் எழுதுவாரா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் என்றாவது நன்றாக எழுதுவார் என்று இந்த உலகமே வாய் பிளந்து அவர் இருக்கும் திசையில் பார்த்துக் கொண்டு நிற்கிறது.அது மண்டபத்தில் காலாற நடக்கும் போது கிடைக்கும் காவியமா என்றால் அதுவும் பரம இரகசியம்.

தன்னால் மட்டுமே உலக அளவில் யாருமே எழுத முடியாத காவியத்தை எழுதி உலகமே கொண்டாடும் என்று அவர் நம்பிக் கொண்டிருந்த காலக்கட்டம்.அட விடுங்க இப்பவும் அவர் அப்படித்தான் நம்பிக் கொண்டிருக்கிறார்.

அவர் யு.எஸ் போனா ஒபாமா வீட்டுல தான் தங்குவேன்.ஆப்கன் போனா ஒசாமா வீட்டில் தான் தங்குவேன் என்று அடித்து விடுவார்.விசாரித்து பார்த்தால் யு.எஸ்னா அது உளுந்தூர்பேட்டை சந்தாம்.அப்ப ஒபாமா யார்னு ஒரத்தநாடு பாண்டி மாக்கானாம்.இன்னும் ஆப்கன் மேட்டரும் ஒசாமா மேட்டரும் தான் தெரியவில்லை.சக இலக்கியவாதிகள் தமிழ்நாடு முழுவதும் இலக்கில்லாமல் பயணித்தும் கண்டுப்பிடிக்க முடியவில்லையாம்.

யாராவது அவருக்கு முன்னால் புத்தகம் இல்ல துண்டுப் பேப்பர்ல எழுதினாலும் புத்தகம் வாங்கியவர்கள் இந்த விமர்சனத்தை  கேட்டால் தண்ணியில்லாத காலத்தில் துடைத்து வீசும் அளவிற்கு விமர்சனம் செய்வார்.யார்கிட்ட எல்லாம் ஒரத்தநாடு பாண்டி மாக்கான் கிட்டதான்.கேக்கலைன்னா விடவா போறார்னு பாண்டியும் கண்ணத் தொறந்து வச்சிக்கிட்டே தூங்குவாராம்.

இனி அவருக்கு முன்னாடி யாரும் புக் கிக்கு எழுதிடக் கூடாதுன்னு தெளிவா இருக்காராம்.அதுக்கு என்ன பண்ணப் போறார்னு பாத்தா இனி புத்தகம் எழுதப் போவது யார்னு பாத்து அவங்க கிட்ட வம்பு இழுக்க போறாராம்.ஒரே வருஷத்தில் பனிரெண்டுக்கு பேருக்கு மேல புத்தகம் விட்டா வம்பு இழுக்க முடியாதுன்னு சோகத்தில் இருக்கிறாராம் ஒரு மாசத்துக்கு ஒரு சண்டை ஒண்டிப்புலி.பெயரை மாத்தலாமான்னு யோசிக்கிறாராம்.எதுக்கா வம்பிழுக்கத்தான்.

இப்போ அவரை தெரிஞ்சவங்க எல்லாம் வேற வழியால சிரிக்கிறாங்களாம்.எதுக்குன்னா ஒசாமாவோட பாதுகாவலர் எழுதின புத்தகத்தை இவர் விமர்சனம் செய்தால் யாரும் வாங்க மாட்டார்கள் என்று ஒசாமா சொன்னார் என்று சொல்லிக் கொண்டு திரிகிறாராம்.அதே நேரம் ஒபாமா பத்தி வர்ற பதினைஞ்சாம் தேதி ஒரு படம் வருதாம்.அதுக்கும் இவர் தான் விமர்சனம் எழுதணும்னு வெள்ளை மாளிகை அடம் பிடிக்குதாம்.

எங்கப் போறது தெரியாம ஒண்டிப்புலி கூண்டுல மாட்டிக்கிட்டு முழிக்குதாம்.ஆனா விசாரித்து பாத்தா பாஸ்போர்ட் இல்லையாம்.பின்ன இதுக்கு முன்னாடி எப்படி ஒசாமாவையும் ஒபாமாவையும் பாக்க போனீங்கன்னு யாராவது கேட்டா கப்பல் போனதா சொல்லப் போறேன்னு சொல்றாராம்.

நல்லவேளை கண்டம் எல்லாம் பிரிஞ்சிக் கிடக்கு.சேர்ந்து இருக்கா நடந்தே போயிருப்பாரேன்னு பாண்டி மாக்கான் நினைச்சு மயக்கத்தில விழுந்தவர் தான் இன்னும் எந்திரிக்கல.

யாராவது சொல்லுங்களேன்.இந்த இலக்கிய தாகத்தை எப்படி தீர்க்கிறதுன்னு. பாண்டி மாக்கான் பொழச்சுப் போகட்டும்.

Wednesday, June 2, 2010

வினவு,பைத்தியக்காரன் - இப்போ என்ன சொல்லப் போறீங்க

நர்சிம் செய்தது பொறுக்கித்தனம் என்றால் நீங்கள் செய்ததது.நீங்கள் எல்லாம் மக்களுக்கு போராடி அடப்போங்கையா.வினவு உங்களை நான் படிக்க ஆரம்பித்தேன் என்றால் ஜே.பி.ஆரின் கல்லூரியில் இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு பையன் இறந்தானே.அதற்கு ஒரு பதிவு வந்ததே. பிறகு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.யாராவது ஏதாவது வாங்கி தந்து விட்டார்களா.இல்லை எழுதி தர ஆளில்லாமல் போய் விட்டார்களா.

உங்கள் நேர்மையின் அளவு தெரிந்து பல் இளிக்கிறதே.பைத்தியக்காரன் எழுதவில்லை என்று சொல்லி விட்டு இன்று ஆதாரங்கள் வேண்டுமா என்று கேட்டப்பின் என்ன சொல்லப் போகிறார்கள்.இவ்வளவு நேர்மை இல்லாமல் இருந்தும் கூட நான் உங்களை மரியாதையுடன் தான் விளிக்கிறேன்.இது ஜாதினால் வருவது கிடையாது.அடுத்தவர்களுக்கும் நாம் மரியாதை கொடுக்க வேண்டும் என்று சிந்தனையிலே வருவது.சரி என்ன எழுதினாலும் விளம்பரம் வந்தால் போதும் என்று நினைக்கும் தோழர்கள் தானே நீங்கள்.உங்கள் நாட்டாமை வேடம் பொருந்தவில்லை என்று காலையில் தான் சொன்னேன்.அதற்குள் இப்படி ஆகி விட்டதா.

பைத்தியக்காரன் - கூட இருந்தே அப்பா எங்கு வேலை செய்கிறார்,சாருவுடன் இருந்த காலத்தில் அவர் மனைவியின் ஜாதி எல்லாம் தெரிந்து கொண்டு கோர்த்து அருமையாக எழுதி இருந்தீர்கள்.பதிவர்களே இனி யாராக இருந்தாலும் முடிந்த அளவு பொத்திக் கொண்டு இருந்தால் நம் வீட்டு விஷயங்கள் எல்லாம் சந்தி சிரிக்கும்.ஊரில் ஒரு முறை உண்டு.கத்தியைத் திருப்பி போட்டு வெட்டுவது.அவ்வளவு சீக்கிரத்தில் உயிர் போகாது.நீங்கள் செய்ததும் இதைத்தான்.

பணத்தைப் பற்றி என்றாவது நர்சிம் பேசியிருக்கிறாரா.நீங்கள் முன்பு சொன்னீர்கள்.வளர்மதி பின்னூட்டத்தில் சொன்னார்.நர்சிம் பணம் பற்றி பேசும் மனிதரா.

நீங்கள் கூட இருந்து செய்த தவறை விட நர்சிம் கோபத்தில் குறைவாகத் தான் செய்துள்ளார்.அவராவது மன்னிப்பு கேட்டார்.நீங்கள் நேற்று செய்யவில்லை என்று சொல்லி விட்டு இன்று நான் தான் எழுதினேன் என்று ஏன் பொய் சொல்ல வேண்டும்.

அபி அப்பா,மங்களூர் சிவா,லதானந்த் மீது சேற்றை இறைத்து எறிந்தீர்களே - இன்னும் நிறைய ஆதாரங்கள் இருக்கிறது.என்ன பதில் இருக்கிறது உங்களிடம்.அது சரி அடிப்படை நேர்மை இல்லாத உங்களிடம் என்ன எதிர் பார்க்க முடியும்.

நர்சிம் முகத்திரையை கிழிக்கிறேன் என்று சொல்லி விட்டு நிறைய பேர் முகத்திரை மட்டுமல்ல இன்னும் நிறைய கிழிந்து விட்டது.

மன்னிப்பு கேட்டப்பின் இந்த டிசைனில் கேள் அந்த டிசைனில் கேள் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களின் வன்மம் எங்கிருந்து ஆரம்பித்தது.ஜாதி எப்படி உள்ளே வந்தது.எல்லாம் தெரிகிறதே.

இதில் எப்படி நர்சிம் பொறுக்கிப் பட்டம் வாங்க வேண்டும் என்று எப்படி நீங்கள்,சந்தனமுல்லை,வினவு எல்லோரும் செயல் பட்டீர்களே அது மாதிரி தான் ஆரம்ப பகடி பதிவும் பின்னால் யார் யார் இருந்தார்கள் என்று வெளியே தெரிய வரும் போது இன்னும் சில முகத்திரைகள் கிழிக்கப்படும்.

டாக்டர் ஷாலினி என்ன நர்சிம் ஜாதியா அவருக்கு பிரச்சனை என்றதும் தட்டிக் கேட்டாரே.அதை வசதியாக மறந்து விட்டு விதூஷ் அவர் ஜாதிப்பெண் என்று ஒரு ஜாதி முலாம் பூசி மெழுகியதை நினைத்தால் அடடே அற்புதம்.

இன்னும் நிறைய இருக்கிறது.தெரிந்ததை எல்லாம் வெளியே சொன்னால் உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்.நர்சிம் எழுதியது எல்லாம் பழைய புத்தகத்தில் இருந்து திருடியது என்றால் ஏன் தமிழ்மணத்தில் ப்ளஸ் ஓட்டுகளாகக் குத்திக் குவித்தீர்கள்.அன்றே சொல்ல வேண்டியது தானே.எது தடுத்தது.அதையும் உங்கள் பாணியிலே ஜாதி முலாம் பூசி சொன்னால் நன்றாகயிருக்கும்.

வினவு சில விஷயங்கள் உங்களுக்கு தெரிந்தால் எழுதுங்கள்.மண்டபத்தில் யாராவது எழுதி தந்தால் போட வேண்டாம்.சொந்தமாக போராட நிறைய விஷயங்கள் இருக்கிறது.அதிலும் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள்.

சாருவின் ஆதரவாளன் என்பதால் நான் நர்சிம் பின்னால் நிற்கவில்லை.ஒருவர் தவறு செய்தார் என்றால் எந்த சூழ்நிலையில் செய்தார் என்று பார்க்க வேண்டும்.அவரா முதலில் பூக்காரி எழுதினார்.அவர் அதில் ஜாதியை சொன்னாரா.ஒரு வருடமாக வன்மத்தோடு அவரா வம்புக்கு இழுத்தார்.

தீபா சொல்கிறார்.அப்துல்லா பற்றி கோபத்தில் சொல்லி விட்டேன்.அது நான் வந்த புதிது.மன்னிப்பு கேட்டுக் கொள்கிறார்.அதே மாதிரி நர்சிம் கூட கோபத்தில் செய்து விட்டார்.மன்னிப்பும் கேட்டு விட்டார்.இருவரும் ஒரே நியாயம் தானே.அந்த நியாயத்தில் தான் நான் நர்சிம் பின் நிற்கிறேன்.

பூக்காரி பற்றிய என் கருத்து.அது தவறுதான்.நர்சிமும் மன்னிப்பு கேட்டு விட்டார்.

எழுத தூண்டியவர்கள்,ஜாதியை உள்ளே இழுத்து விட்டவர்கள்,நர்சிம்மை விட மோசமாக எழுதியவர்கள்,நம்பிக்கைத் துரோகம் செய்தவர்கள்,தெரியாத விஷயத்தை விளம்பரத்திற்காக உபயோகித்தவர்கள்.

நான் தான் சொன்னேனே.நீங்கள் வீசியக் கத்தி உங்கள் கழுத்தைப் பதம் பார்க்கிறது.இனியாவது பதிவர்களின் சொந்த விஷயம் தெரிந்தால் உங்களுடன் வைத்து கொள்ளவும்.கார்க்கியை எத்தனை முறை பாராட்டியிருப்பீர்கள்.அதெல்லாம் இப்படி ஒரு விஷத்தை இறக்க தானா.மாதவராஜ் கேட்கிறார்.கார்க்கி எங்கே போனான்.உங்களுடைய முதல் பதிவில் கார்க்கி பதில் சொன்னாரே.நீங்கள் ஏன் பதில் சொல்லவில்லை.கார்க்கி இருந்தது அவர் கண்ணுக்கு தெரியவில்லையா.

நீங்கள் நர்சிம் அப்பா பற்றி சொன்னால் ஆதாரம்.அதுவே சந்தனமுல்லையின் ஆர்குட் பக்கத்தை இவர்கள் பயன்படுத்தியது தவறா.

உங்களிடம் எந்த பதிலும் எதிர்பார்க்க முடியாது.நீங்கள் எல்லாம் அடிப்படை நேர்மையில்லாதவர்கள்.

வாழ்க்கை ஒரு வட்டம் - அது நர்சிம் மட்டுமல்ல வினவுக்கும் பொருந்தும்

வினவு,

உங்கள் பதிவைப் படித்து விட்டு மிகவும் பெருமையாக உணர்ந்தேன்.ஆனால் என்ன நாட்டாமை வேடம் தான் பொருந்த மாட்டேன் என்கிறது.இன்னைக்கு நர்சிம் தவறு செய்து  விட்டார் என்று அடிக்க ஒங்கும் கைகள் தான் நாளைக்கே நீங்கள் சிக்கிக் கொண்டாலும் அடிக்க வரும்.எதிலும் சிக்கி விடாதீர்கள்.

பிளாச்சிமடா வழக்கு என்ன ஆனது

குமுததிற்கு எதிரான போராட்டம் என்ன ஆனது

இதிலும் கொஞ்சம் அதிகமாக கவனம் செலுத்தலாம் என்று நினைக்கிறேன்.

சாதியைப் பார்க்கும் கண்ணாடியை போட்டுக் கொண்டு பார்க்காதீர்கள்.எல்லாமே ஜாதியாகவே தெரியும்.

உண்மைத்தமிழன் பதிவில் எனக்கு நர்சிம் அவர்களை  எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று தெரியும் என 
செந்தழல் ரவி சொல்லியிருக்கிறார்.அவர் எதாவது ஏடாகூடமாக செய்து விட்டால் (ரொம்ப யோசிக்காதீங்க உங்களுக்கு முன் போய் அவர் வீட்டில்,பணியிடத்தில் போராட்டம்) நீங்கள் செந்தழல் ரவிக்கு எதிராக பதிவு எழுதினாலும் எனக்கு ஆச்சர்யமில்லை.

அப்புறம் உங்களுக்கு நடுநிலைவாதி வேடம் சரி வர ஒத்து வரவில்லை என்று நினைக்கிறேன்.நீங்கள் நடு நிலைவாதியாக இருந்தால் கலகலபிரியாவிற்கு ஆதரவாக நாளை பதிவு எழுத வேண்டும்.


செந்தழல் ரவி - உங்களுக்கு வளர்மதி பற்றிய புரிதல் ஒரு வருடம் கழித்து வரும் போது அதே புரிதலை நர்சிம் புரிந்து கொள்ள அவகாசம் கொடுக்காமல் அடிப்பது ஏன்.

விஜி பதிவை அன்றே எடுத்திருந்தால் இது நடந்திருக்குமா என்று கேட்க நான் என்ன முட்டாளா.

முட்களும்,கற்களும் அதன் வழியில் தான் இருக்கிறது.நாம் தான் அங்கு போகிறோம்.

வளர்மதி சார் - எதிர்வினை நடக்கும் இடத்தில் நர்சிம் பணம் பற்றி பேசுவார் என்று சொல்வது சரிதானா.

வரலாறு புதிப்பிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.அதில் தோழர்களும் சிக்கலாம்.நானும் சிக்கலாம்.