திவாகர் வாசு - சென்னை வந்த புதிதில் சென்னை சி.ஐ.டி நகரில் இருக்கும் டெலிபோன் குவாட்டர்சில் குடியிருந்தோம்.விஜய் போன்ற திராபை நடிகர் எல்லாம் கொஞ்சமே கொஞ்சம் தெரிந்த காலத்தில் எங்கள் குடியிருப்பின் அத்தனை பசங்களுக்கும் திவாகர் வாசு தான் ஹீரோ.இன்னும் தெரியவில்லையா(விஜய் போன்றோர் கொண்டாடப்படும் சமூகத்தில் இது தான் பிரச்சனையே இதற்கு தான் கேரளாவில் பிறந்திருக்க வேண்டும் - நன்றி சாரு மற்றும் சாறு சங்கர்)
ராபின் சிங் எல்லாம் அவர் வீட்டிற்கு அடிக்கடி வருவார்.ராபின் சிங் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்திருந்த காலம்.ரன்னிங் பெட்வின் தி விக்கெட்ஸ் அடிக்கடி அவர் ஆடும் போது உச்சரிப்பார்கள்.எதிர் முனையில் ஜடேஜா ஓடிக் கொண்டிருப்பார்.அது திவாகர் வாசு ஓடியிருக்க வேண்டிய இடம். காலையில் டென்னிஸ்,மாலையில் கோல்ப் மட்டையோடு திவாகர் வாசு அடிக்கடி தென்படுவார்.கொஞ்சம் ஏறி அடித்தால் அவர் வீட்டு ஜன்னல் உடையும். உடைத்திருக்கிறோம்.அவர் எதுவுமே சொன்னதில்லை.
ரஞ்சி ஆடும் தமிழக அணியில் திவாகர் வாசு ஆடும் போதெல்லாம் அவர் பெயர் நாளிதழில் வராத நாட்கள் குறைவு தான்.என்றாவது காரை வெளியே எடுக்கும் போது எங்களுக்காக மூன்று பந்துகள் வீசி விட்டு செல்வார்.அதை ஆடுவதற்கு தான் அடிதடி நடக்கும்.ரஞ்சி போட்டிகள் இல்லாத நாட்களில் பர்ஸ்ட் டிவிஷன் போட்டிகள் நடக்கும்.அணியின் பெயர்களே வித்தியாசமாக இருக்கும்.மாம்பலம் மஸ்கிட்டோஸ்.அவர் செம்பிளாஸ்ட் அணிக்காக விளையாடியதாக ஞாபகம்.அந்த அணி எல்லா முறையும் குறைந்தது அரையிறுதியை தொடாமல் வந்ததில்லை.
ஒரு மாலை வேளையில் திவாகர் வாசுவைப் பற்றிய பேச்சு எழுந்தது.அவருக்கு இங்கிலாந்து அணியில் ஆட வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் ஆடினால் இந்திய அணிக்கு மட்டும் தான் இல்லை சும்மா இருப்பேன் என்று மறுத்து விட்டாராம்.அவர் மேல் ஒரு மதிப்பு எழுந்தாலும் அவர் ஒரு ஏமாளி என்ற எண்ணம் எழாமலில்லை. (அதற்கு முந்தைய வருடத்தில் தான் இங்கிலாந்தில் ஆடிய போட்டிகளில் இருந்து அணிக்கு இரண்டு திறமையான வீரர்களை கண்டுப் பிடித்திருந்தோம்.அது கங்குலி மற்றும் டிராவிட்.)
இங்கிலாந்து இப்படி செய்வது ஒன்றும் புதிதல்ல.தற்போது இருக்கும் அணியில் கீஸ்வெட்டர்,லம்ப்,பீட்டர்சன், ஜோனதன் டிராட் என்று தென் ஆப்பிரிக்க வீரர்களை வைத்தே அவர்கள் கண்ணில் விரலை விட்டு ஆட்டுகிறார்கள்.திவாகர் வாசுவும் இங்கிலாந்து அணியில் ஆடியிருந்தால் தெரிந்திருக்கும் செய்தி.அப்போது இந்திய அணி கர்நாடக லெவனாக இருந்தது.கும்பிளே,ஸ்ரீநாத்,பிரசாத்,ஜோஷி,சுஜித் சோமசுந்தர்,விஜய் பரத்வாஜ்,தோடா கணேஷ் மற்றும் டேவிட் ஜான்சன் என்று படு திராபையாக இருந்தது.உள்ளூர் ரஞ்சியிலேயே ஜெயிக்க முடியாத அணி இந்திய அணியில் விளையாடினால் எப்படி இருக்கும்.
திவாகர் வாசுவிற்கு தற்சமயம் வயது நாற்பதை தாண்டி விட்டது.இப்பொழுதும் குவைத் அணிகளில் ஒரு அணியின் சார்பாக விளையாடி கோப்பையை வென்று உள்ளார்.இன்னும் அவர் ஆட்டத்திறனை இழக்கவில்லை என்று பேசிக் கொண்டார்களாம்.
ஸ்ரீநாத்,அகர்கர்,பதான்,சுக்லா தான் கபில்தேவிற்கு அடுத்தபடியாக அணிக்கு கிடைத்த ஆல்ரவுண்டர் என்று சொல்வார்கள்.அவர்களே ஆல்ரவுண்டர் என்றால் திவாகர் வாசுவை என்ன சொல்வது.தற்போது வாசு பெங்களூரில் இருக்கும் நேஷனல் கிரிக்கெட் அகடமியில் பயிற்சி பெரும் வேகப் பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்.கிரிக்கெட்டுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு அழியவே அழியாது.
சென்னையில் என் பதின்ம வயதின் முதல் எதிர் வீட்டு ஜன்னலே திவாகர் வாசு தான்.அந்த வீட்டை காலி செய்யும் போது திவாகர் வாசு அவர் வீட்டை இடித்து புதுப்பித்து கொண்டிருந்தார். அந்த வீடு இருந்த நிலை இந்திய அணியின் தேர்வாளர்கள் அவர் வாழ்கையில் விளையாடியது போலிருந்தது.
Wednesday, May 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
தமிழ்மணம்,தமிலீஷ் இதில் எல்லாம் யாராவது சேர்த்து விடவும்.முடிந்தால் டிவிட்டர்,பஸ் என்று போட்டு யாருடைய கொமனத்திலாவது கோர்த்து விடவும்.
\\குறைந்தது அரையிறுதியை தொடாமல் வந்ததில்லை.\\
தொடனும் பாஸ்.
தொட்டாதான் வரும்.
தில்லானா மோகனாம்பாள்ல, சிவாஜியையும் பத்ம்னியையும் பார்த்த மாதிரி இருக்கு பாஸ்.
நீங்களும் எல்லா டிசைன்லயும் தூக்கி பாக்குறிங்க! ஆனா அங்க தான் லிங்க் வர மாட்டிங்குது!
சீக்கிரமே லிங்கு வர வாழ்த்துக்கள்!
Vasu left arm spinner thane(tallest spinnernu solvanga ) batting also ok ..ippadi sariya vagai padutha mudiyatha,complete all rounder agavum illatha players palar vaipu illamal waste agi irukanga. Sharath also solid batsman + talented and wasted .w.v raman dum adiche kali aanavar.
Vaal paiyan "ull kuthu sema kuthu!
ஹ்ம்ம் .. எனக்கு நமிதாவதான் தெரியும் :))))
வணக்கம்
டிவாகர் வாசுவை கிரிக்கெட் விளையாடிய அனைவருக்கும் தெரியும் , opening batsmen , opening bowler ( Left arm medium fast ), left arm spinner , என தமிழக அணிக்காக பல காலம் விளையாடியவர் , Noel டேவிட் எல்லாம் இந்திய அணிக்காக விளையாடியபோது இவர் விளையாடாதது தேர்வு குளறுபடிதான் , unlucky ( like all tamil nadu players )
டி.வாசுவை சொல்கின்றீரா?(இப்படித்தான் தினமணியில் அவர் பெயர் வரும்) இவர் ரஞ்சி கோப்பை தமிழக அணியில் ஆடியதாக அடிக்கடி பேப்பரில் படிப்பேன், மனோஜ் பிரபாகர், டி.வாசு, ராமன் லம்பா(கரெக்ட்டுதானே) மூவரையும் ரஞ்சி ஆடுபவர்களில் நான் தொடர்ச்சியாக கவனித்தேன், வாசுவுக்கு அணியில் இடம் கிடைக்காது போனது வருந்தத்தக்கதே
குழலி அவரே தான்.
Post a Comment