முகு : இந்த பதிவை பதிவுலக ஜெமினி இரட்டையர்களில் ஒருவரும், கிரிஸ்டோபர் நோலனின் பேரனுமான அதிஷாவிற்கு சமர்ப்பிக்கிறேன்.
இந்த படத்தில் முதலில் நடிப்பதாக இருந்து பிறகு மறுத்த சூர்யாயின் பேரழகன் கதாபாத்திரம் போன ஒரு ஊனமுற்ற நபர், பிறகு இந்த படத்தை தயாரிக்க ஒத்துக் கொண்டு தயாரிக்காமல் விட்ட லிங்குசாமியின் பெயரை லேசாக டிங்கரிங் செய்து வில்லனுக்கு அங்குசாமி என பெயர், அவருடைய தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்சை கேலி செய்யும் வகையில் எங்க பிரதர்ஸ் என்று வார்த்தைக்கு வார்த்தை வில்லனை சொல்ல வைக்க முடிந்த மிஷ்கினால் திரைக்கதையை சரியாக அமைக்க முடியவில்லை. இப்படி உள்குத்து வைப்பதிலும், டிவிடியை பார்ப்பதிலும் நேரத்தை கழித்தால் எங்கிருந்து கதை எழுதுவது. இது மாதிரி உள்குத்து வைப்பதில் சொற்சமாதி, சொற்சித்திரம், புனைவு எழுதும் பதிவர்களே மிஞ்சி விடுகிறார் மிஷ்கின். எனக்கே பொறாமையாக இருக்கிறது மிஷ்கின். வாழ்த்துகள்.
துவக்க காட்சியில் நகரில் ஒரு கொள்ளை நடக்கிறது, நாயகனை முதல் சந்திப்பில் கும்மி, ஜிம்மி எடுக்கும் நாயகி, போலீசிற்கே துப்பு பிடித்துக் கொடுக்கும் துப்பு கெட்ட கதாநாயகன் இது மாதிரியான காட்சியமைப்புகளை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது என்று யோசிக்க வேண்டாம். போன வருடம் வந்த கோ படத்தில் தான். சரி இதெல்லாம் ஒரு கோ - இன்ஷிடென்ஸ் என்று எடுத்துக் கொள்ள வேண்டியது. பேட்மேன், ஸ்பைடர்மேன் எல்லாம் பார்த்திருந்தால் அதில் வரும் காட்சி எல்லாம் ஞாபகம் வந்திருக்கும். ஆங்கில தெரியாத டூமிழ் பதிவரான எனக்கு கோ படம் தான் ஞாபகம் வருகிறது.
அஞ்சாதேவையும், சித்திரம் பேசுதடி படத்தையும் ரசிகர்களே இன்னும் மறக்கவில்லை. மிஷ்கின் மறப்பாரா என்ன. அதனால் அதிலிருந்தும் நாலைந்து காட்சிகளை பிடித்து தொலைத்திருக்கிறார். இதையெல்லாம் கற்பனை வறட்சி, டெம்பிளேட் என்று இலக்கியவாதிகளும், பீட்டர்களும் வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் இலக்கில்லாமல் அலையும் மிஷ்கினின் தீவிர ரசிகானான எனக்கு அவர் படத்திற்கு அவரே டிரிபுட் செய்திருக்கிறார். மொத்தத்தில் மிஷ்கினை ரீபுட் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது.
இதுவரை கால்களுக்கு மட்டுமே கோணம் வைத்த மிஷ்கின் இந்த முறை கொஞ்சம் முன்னேறி கால் சென்டரில் கோணம் வைத்து படத்தை செய்துக்கு செதுக்கு என்று செதுக்கியிருக்கிறார். எப்படியும் இன்னும் எட்டு வருடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி முகத்திற்கு கோணம் வைப்பார் என்று நினைக்கிறேன்.
நகு : என் நம்பிக்கையை இழக்கும் போதே என்னையும் இழந்துவிடுகிறாய் - மொத்து புரோட்டாவில் கேபிளானந்தா
படத்தில் எதிரியை தாக்கும் முன் அவர்களை தூண்டி விட்டு பிறகு போட்டு சாத்துகிறார்கள். அதே போல் பதிவர்களை தூண்டி விட்டு படத்தை தாக்க வரும் போது வெளுத்து விடலாம் என்று நினைத்து முகமூடி சொடாமூடி என்று தலைப்பு வையுங்கள் என்று என்னமோ தலைப்பிற்கு பஞ்சம் போல அவர் பாவம் பார்த்து எடுத்துக் கொடுத்திருக்கிறார். படத்தை மட்டும் வெளுக்காமல் மிஷ்கினையும் சேர்த்து வெளுத்து விட்டார்கள் குங்பூ தெரியாத ஆனால் குஷ்பூவை தெரிந்த ப்ளடி பிளாக்கர்ஸ்.
செல்வாவும், நரேனும் ஒரே சமயத்தில் சீர்திருத்த பள்ளியில் படித்தவர்களாம். ஆனால் பார்க்க செல்வா சீனியர் சிட்டிசன் போல இருக்கிறார். இதற்கு காரணம் வறுமை அல்லடா முட்டாள்களே கராத்தே கிட்டில் ஜாக்கி ஜான் கூட இப்படித்தான் சொங்கியாக இருப்பார் என்று சமீபத்தில் அந்த டப்பிங் படத்தை பார்த்த ஒரே காரணத்தால் எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன்.
பூஜா ஹெக்டேவிடம் பொறுக்கி என்று சொல்லிக் கொண்டே அடியுங்கள் என்று மிஷ்கின் சொல்லியிருப்பார் போல. பொறுக்கி என்று வராமல் கஷ்டப்பட்ட நாயகி எப்படியோ பர்பி, பர்பி என்று சொல்லிக் கொண்டே தாண்டியா ஆட்டம் ஆட ஜீவாவிற்கு நவதுவாரத்திலும் இருந்து காதல் பொத்துக் கொண்டு வழிகிறது. நமக்கும் வருகிறது. எரிச்சல் வருகிறது. நாயகனுக்கு லீ என்று பெயர் வைத்ததை போல படத்திற்கு அதே மாதிரி ஒரு ஒற்றை எழுத்தில் வைத்திருக்கலாம். ஷிட்.
கடைசியாக வில்லனுக்கு தெரியாத ஏதோ ஒரு பார்மை நிரப்ப செல்வா சொல்லித் தருகிறார். அதை வைத்து ஜீவா வில்லனை அழித்து அதோடு படத்தையும் முடித்து நம்மை காக்கிறார். மிஷ்கின் உங்களுக்கு ஆட்டையை போட ஜப்பானிய, கொரிய மொழி தான் சரி. அந்த மொழி படத்தை அப்பாடக்கர் பதிவர்கள் கொஞ்சமாக பார்ப்பதாக ஏஜென்சி செய்தி சொல்கிறது.
படம் வெளி வருவதற்கு வருடம் ஒரு பாகம் எடுக்கயிருப்பதாக மிஷ்கினும், தனஞ்ஜெயனும் பேட்டி தந்தார்கள். தாண்டவம் படத்தின் கதை என்னுடையது என்று சொன்ன உதவி இயக்குனரிடம் தனஞ்ஜெயன் சொன்னாராம். இந்த கதையை பார்த்திபன் படத்திலேயே சபாஷ் பார்த்து விட்டோம். அதே போல பேட்மேன்,ஸ்பைடர்மேன், டாபர்மேன் படம் எல்லாம் முகமூடி கதை சொல்லும் போது தெரியவில்லையாம். ஏற்கனேவே மொசர்பியர் என்று நிறுவனத்தையே படம் தயாரிக்கலாம் என்று சொல்லி இப்போது டிவிடி கூட தயாரிக்க விடாமல் செய்து விட்டார். இப்போது சனி இடம் பெயர்ந்து யூடிவிக்கு போயிருக்கிறது.
இன்னும் மிஷ்கின் மீது நம்பிக்கை, தும்பிக்கை இருக்கிறது என்று சொல்பவர்கள் இறுதி காட்சியில் நரேன் விட்டு சென்ற சுத்தியல் இருக்கிறது. அதை எடுத்து அடித்து கொன்று தற்கொலை செய்து கொள்ளவும்.
மிஷ்கினுக்கு கடைசியாக ஒரு பாட்டு அவருக்காக அவர் படத்திலிருந்தே :
வாய மூடி சும்மாயிருடா
பிகு : என்னடா இது முன்குறிப்பு என்று சொல்லி அதிஷாவையும், நடுவில் வரும் குறிப்பில் கேபிள்ஜியையும் தொடர்புப்படுத்துகிறானே என்று ரொம்ப யோசிக்க வேண்டாம். அவர் படத்தை அவருக்கு தெரிந்த புரூஸ்லீக்கு சமர்ப்பிக்கிறார். சாக்ரடீஸ் தத்துவத்தை புகுத்தி அவர் அதிமேதாவி தனத்தை படத்தில் காட்டும் போது நானும் எனக்கு தெரிந்த அதிஷாவிற்கு சமர்ப்பித்து இருக்கிறேன். கேபிள் குறிப்பையும் பகிர்ந்து எனக்கு தெரிந்த வகையில் வவ்வால் பின்னூட்டம் கிடைக்காதா என்ற நப்பாசையில் மேதாவிதனத்தை காட்டியிருக்கிறேன்.
Wednesday, September 5, 2012
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அனைவரும் மொக்கை படம் என்றே சொல்லி உள்ளனர்.. அதனால் பார்க்கப் போவதில்லை. மிஷ்கின் ஊத்திக்கிட்டாரு
இரும்பு திரை,
//வவ்வால் பின்னூட்டம் கிடைக்காதா என்ற நப்பாசையில் மேதாவிதனத்தை காட்டியிருக்கிறேன்.//
ஹா... ஹா ...என்னைய கலாய்ச்சிட்டாராம் :-))
எனக்கு என்னமோ மிஷ்கின் புண்ணியத்தால் "ட்ரிப்பூட்" என்ற புதிய சொல்லாடல் தமிழ்ப்பதிவுலகில் பிரபலம் அடைந்துவிட்டது என நினைக்கிறேன்.
எங்கேப்பார்த்தால் டிரிப்பூட்டாவே இருக்கு.
ஹி...ஹி விமர்சனம் எழுதினால் ஹீரோ படம் போடவில்லை என்றாலும் ஈரோயினி படம் போடணும்னு(வளைவு,நெளிவு ,எழுச்சி எல்லாம் குறிப்பிடணும்)கேபிளானந்தா ஆசிரம ரூல்ஸ் தெரியாதா சாமி?
வர வீக் எண்ட் எனது அபிமான திரைப்படமான "முகமூடியை" டைட்டிலுக்காகவே தியேட்டரில் போய்ப்பார்க்கப்போகிறேன்(அது வரைக்குமாவது தியேட்டரில் ஒட விடுங்கப்பா)
பி.கு:
விமர்சனம் எழுதினால் அதனை உமக்கே ட்ரிப்பூட் செய்துவிடுகிறேன் :-))
மொக்க படத்துல உள்குத்து வெச்ச மொத ஆளு நம்ம மிஷ்கின் மட்டுமா தான் இருக்கும்
ஹாஹாஹா... விமர்சனம் செம மச்சி...
Post a Comment