Saturday, January 29, 2011

மீனவர்களுக்காக காகித ஆயுதம் செய்வோம்

வரப்போற மூணு நாலு மாசத்துல ஒரு மீனவர் இறந்தாலும் எங்க குடும்பத்துல இருந்து ஒரு ஓட்டு கூட விழாது,யாருக்கும் ஓட்டுப்போட மாட்டேன்னு எல்லோரும் சொல்லுங்க. அது தான் சாத்தியமான வழி.மீனவர்களுக்காக டிவிட்டர்ல இத்தனை பேர் எழுதுறது சந்தோஷமா இருந்தாலும் இது எத்தனை நாளைக்கு இந்த கேள்வி தான் முன்னால வந்து நிக்குது. இன்னொரு சாவு வந்தா தான் அடுத்த கட்ட போராட்டம்னு நினைக்கக்கூடாது.

உங்களுக்கு ஓட்டு இல்லன்னா எதிர்ப்பைக் காட்ட வேறு வழியே இல்லையா.உங்க பேச்சைக் கேக்குற நாலு பேர் இருப்பாங்க. அவங்களுக்கு ஓட்டு இருந்தா கூட நீங்க சொல்லி எதிர்ப்பைக் காட்டலாம். அடிமடியில கை வைக்கணும்.அப்ப தான் கொஞ்சமாவது பயம் வரும்.

நாலு மாசம் கழிச்சி மீனவர் இறந்தா என்ன செய்யணும்னு கேட்டா அதுக்கு பதில் இது தான்.எந்த கட்சிக்கும் இல்லாமல் தேர்தல் புறக்கணிப்பு,49 ஓ,சுயேட்ச்சைக்கு ஓட்டு இப்படி ஏதாவது ஒரு வழியைத் தேர்வு செய்தால் கூட முடியும். இவன் இல்லன்னா அவன் ஆட்சிக்கு வரட்டும் இந்த நினைப்பை இப்படித்தான் அடிக்கணும். நாம போடுற அந்த நாலு ஓட்டால ஏதாவது சுயேட்ச்சைக்கு டெபாஸிட் போகாம இருந்தா கூட அது ஒரு பெரிய வெற்றி தான்.இப்போ நிருபமா எதுக்கு இலங்கைக்கு போயிருக்காங்க. தேர்தல் முடியிற வரைக்கும் ஒண்ணும் பண்ணாதீங்கன்னு சொல்வாங்க.அப்புறம் பழைய குருடி கதவைத் திறக்குற கதை தான். அதனால நாம முந்தணும். வைகோ ஆறாம் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போறேன்னு சொல்லியிருக்கார்.அதுக்கு பதிலா ஒரு தடவை கடல்ல போய் ஒரு சவுண்டு விட்டு மீனவர்கள் வாழ்க்கையைத் தெரிஞ்சிக்கிட்டா புண்ணியமா போகும்.

புறக்கணிப்பு நிச்சயம் நடக்கக்கூடியது தான்.எதுவுமே சாத்தியம் இல்லன்னு நினைச்சா சாத்தியம் இல்ல தான்.

5 comments:

Vijay Periasamy said...

சமூக வலைதளங்கள் , வெறும் பொழுதுபோக்கு மட்டும் தானா?
சிங்கள ராணுவத்தின் கையில் செத்து மடியும் தமிழ் மீனவர்களுக்காக
ஒன்றிணைவோம் .
Post ur tweets with #tnfisherman at the end

Vijay Periasamy said...

சமூக வலைதளங்கள் , வெறும் பொழுதுபோக்கு மட்டும் தானா?
சிங்கள ராணுவத்தின் கையில் செத்து மடியும் தமிழ் மீனவர்களுக்காக
ஒன்றிணைவோம் .
Post ur tweets with #tnfisherman at the end

Yaathoramani.blogspot.com said...

நல்ல யோசனை.நல்ல பதிவு வாழ்த்துக்கள்

Unknown said...

இந்தத் தளம் யாரோ விஷமிகளால் சூறையாடப்பட்டு விட்டதோ????

மரா said...

நியாயமான பேச்சு.