இந்த தலைப்பைக் கண்டவுடன் அவர்கள் சங்கீதம் படிக்கிறார்கள் என்று யாரும் நினைத்து, எச்சில் தெறிக்க சிரித்து யாரையும் நனைத்து விட வேண்டாம்.க.மா.பா - அதன் விரிவாக்கம் இது தான் கட்சி மாறும் பாட்டாளிகள்.இந்த பதிவைப் படித்து விட்டு யாரும் பெட்டியைத் தூக்க வர வேண்டாம்.என் அறையில் இருப்பது ஒரே ஒரு அட்டைப்பெட்டி தான்.அதுவும் என்னுடையது இல்லை.
நீங்கள் கூட்டணி மாறும் செய்தியைப் படிக்கும் போதெல்லாம் எனக்கு ஞாபகம் வரும் கேரக்டர் மனோரமா.சம்சாரம் அது மின்சாரம் படத்தில் யார் பேச்சையும் கேட்காமல் நீ கம்முன்னு கிட டைவர்ஸ் டைவர்ஸ் தான் என்று வலுக்கட்டாயமாக விவாகரத்து செய்ய வைப்பார்.அப்படித்தான் ஒவ்வொரு முறையும் சின்னப் பிள்ளைகள் மாதிரி "மிஸ் இவன் என்னை நுள்ளிட்டான்..,என்னை கிள்ளிட்டான்..,என்னை தள்ளிட்டான்.." என்று ஏதாவது காரணம் காட்டி கூட்டணியை ரத்து செய்கிறீர்கள்.
இது எப்படி இருக்கிறது என்றால் சி.வி.சண்முகம் என்ற அ.தி.மு.க உறுப்பினர் ஏதோ ஒரு கொலைவழக்கில் பா.ம.க கட்சி உறுப்பினர்கள் பெயரைச் சேர்த்து விடுகிறார்.அதை கொட நாட்டில் ஓய்வு எடுத்து கொண்டிருக்கும் அந்த கட்சியின் தலைவி தட்டிக் கேட்கவில்லை என்பது தான் உங்களின் குற்றம்.மக்கள் பிரச்சனையே இரண்டாம் பட்சமாக இருக்கும் போது இது என்ன அவர்களுக்கு பெரிய சிக்கலா."டீச்சர் என் பையனை அந்த பையன் நுள்ளி,கிள்ளி,தள்ளி இருக்கான்..உங்க கிட்ட புகார் குடுத்தும் நீங்க ஒண்ணுமே கேட்கவில்லை..நாங்கள் இந்த பள்ளியை விட்டு வெளியேறுகிறோம்.." என்று சொல்லும் பெற்றோர்கள் போல் உள்ளது உங்கள் வாதம்.உடனே அந்த ஆசிரியர் சொல்கிறார் "ஏப்ரல் மாசம் தான் அந்த ஸ்கூல் சரியில்லன்னு இங்க வந்தீங்க..இப்போ இது சரியில்ல சொல்லிட்டு வெளியே போறீங்க..அப்போ நீங்க தான் சரியில்லை.." என்று சொன்னால் எப்படி இருக்கும் கொஞ்சம் யோசித்து பாருங்கள்."எங்கேயும் சேர்க்கவில்லை என்றால் உங்கள் நிலைமை என்ன.
வாய்சவடால் தான் பா.ம.க கட்சி அழிய காரணம்.கடந்த பத்து ஆண்டுகளாக நாங்கள் இருக்கும் கூட்டணியே வெற்றி பெறும்.அது வரலாறு,புவியியல் என்று சொன்ன வரலாறு நோட்டு புத்தகம் என்ன இன்று பூகம்பத்தில் தொலைந்து விட்டதா.இல்லை மக்கள் உங்கள் கூட்டணியைத் துவைத்து விட்டார்களா?(அழுக்கு போயிருச்சா..போயிருச்சா அப்புறம் ஏன் இன்னும் தேய்க்கிறீங்க..)வரலாறு என்றுமே மாறுவதில்லை அது சொல்லும் பாடம் உங்களால் எங்கும் இருக்க முடியாது நிரந்தரமாக.
உங்களுக்கு ஏழு இடம் தந்தேன் ஒரு பலனும் இல்லை.ஆனால் ம.தி.மு.க கூட ஒரு இடத்தில் வென்று இருக்கிறது என்று அவர்கள் கேட்டால் என்ன செய்ய முடியும் (அட இதுவும் வரலாறு தான்).ஜெயித்தால் மக்கள் சக்தி காரணம்.தோற்று போனால் மக்கள் பணம் வாங்கி விட்டார்களா இல்லை வாக்கு இயந்திரம் வேலை செய்யவில்லையா ?
தி.மு.க கூட்டணி உடைந்த போது ஒரு தி.மு.க உடன்பிறப்பு சொன்ன காரணம் இதை நினைத்தால் இன்று கூட சிரிப்பு வருகிறது."மானாட மயிலாட" - இந்த நிகழ்ச்சியை அவர் விமர்சித்த விதம் தான் காரணம் என்று சொன்னார்.அப்படி என்ன சொன்னார் என்று கேட்டதற்கு வந்த பதில் "மானாட மயிலாட மார்பாட" என்று சொல்லி விட்டார்.கூட்டணி உடைந்து விட்டது.அதெல்லாம் இருக்காது என்று நான் சொன்னேன்.இன்று நீங்கள் சொல்லும் காரணத்தைப் பார்த்தால் அது உண்மையா என்று நினைக்கத் தோன்றுகிறது.
இப்படியே கூட்டணி மாறி கொண்டே இருந்தால் வரும் சட்டசபை தேர்தலிலும் உங்களுக்கு தோல்வி தான்.விஜயகாந்த் எல்லா கட்சிகளும் தனித்து போட்டியிட்டால் தான் தெரியும் என்று சொல்லும் போது கேட்காத நீங்கள் இன்று யாருமே சேர்க்கவில்லை என்றதும் அதே கருத்தைச் சொல்கிறீர்கள்.யாராவது சேர்த்து கொண்டால் மறுபடியும் கூட்டணியாக தான் போட்டி இல்லை யாருமே கூட்டணி வைக்க கூடாது.(என்ன கொடுமையான கொள்கை பா.ம.க இது)
"நானோ ஏன் பிள்ளையோ கட்சியில் ஏதாவது பொறுப்பையோ இல்லை பதவி கிடைத்தாலும் வகிக்க மாட்டோம்" - இந்த வார்த்தைகள் யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா.சரி நானே ஞாபகப்படுத்துகிறேன்.இது ஆரம்ப கால பா.ம.க நிறுவனரின் கொள்கை முழக்கம்.அப்பொழுது அவர் மூன்று ரூபாய்க்கு ஊசி போடும் மருத்துவர்.இன்று அப்படியா.ஆட்சிக்கு ஆட்சி கொள்கையும் மாறும் கூட்டணியும் மாறும்.
யாருமே சேர்க்கவில்லை என்றால் அவர்களின் கோட்டையான விருத்தாசலத்தில் வெற்றி பெற்ற விஜயகாந்துடன் கூட்டணி வைப்பார்கள்.பிறகு ரத்து செய்து வருகாலத்தில் விசை கட்சி ஆரம்பித்தால் அவருடன் சேர்ந்து இன்னும் கொஞ்சம் பணம் சம்பாதிப்பார்கள்.முடியவில்லை என்றால் வேறு கூட்டணி.
இனி வரும் ஒரு தேர்தலில் மட்டுமாவது அவர்களை எந்த கூட்டணியிலும் சேர்க்காதீர்கள். தயவு செய்து ஒரு அரசியல் அனாதையை உருவாக்குங்கள்.
Thursday, January 27, 2011
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
இப்போவும் இது பொருந்தி வருகிறது
மிகத் தெளிவான கட்டுரை. நீங்கள் சொன்னது போலவே அவர்களை அரசியல் அனாதை ஆக்க வேண்டும்
2011 ல் ஆட்சியை பிடிப்போம் அப்படினாரு. இப்ப அவரே பாவம் confuse ஆயிட்டாரு.
ஒரே ஒரு மந்திரி பதவி கிடைச்சது. கடசில உள்ளதும் போச்சுடா நொள்ள கண்ணா அப்படிங்கற மாதிரி ஆச்சு.
அவரது கட்சி தொண்டர்களை நினைத்தால் தான் கவலையா இருக்குது!! இவர் பேச்சை நம்பி அடுத்த கட்சி காரங்களை பகைச்சுக்க முடியாது... திடீர்னு இவர் அந்த கட்சிக்கு தவ்விட்டா இவங்க பாடு திண்டாட்டம் தான்..
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com
Post a Comment