டிசம்பர் வந்தாலே கர்னாடக சங்கீதம் களைக் கட்டுவது போல நான் ராமராஜனை ஒரு கட்டு கட்டுவது ஒரு வழக்கம்.ராமராஜன் படத்தில் நாயகன் மிகவும் நல்லவனாகயிருப்பான்.பெண்களுக்கு ஆபத்து என்றால் பொங்குவான் போன்ற டெம்ப்ளேட்டினால் காலியான ஒரு நடிகர் அவர்.இந்த டெம்ப்ளேட்டையும், அம்மாவை பார்த்தால் கேள்வி கேட்க வேண்டும் என்ற மணிரத்னம் பாணி சினிமாவையும்(தளபதி,கன்னத்தில் முத்தமிட்டால்) மக்களுக்கு ஞாபகப்படுத்தினால் போதும் ஒரு தமிழ்ப்படம் தயாராகி விடும். குறியீடுகளையும்,கேமரா கோணங்களையும்,கதையின் போக்கு வித்தியாசமாக வேண்டுமே இருக்கவே இருக்கிறது ஜப்பானிய,கொரிய சிந்தனைகள்.
அம்மாவிடம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்கு பதில்(மணிரத்னம் அது மாதிரி இரண்டு படம் எடுத்தார்) ஒருவனுக்கு முத்தம் வாங்க வேண்டும்,மற்றவனுக்கு ஒரு அறை கொடுக்க வேண்டும். கொடுக்கல்,வாங்கல்(நேரெதிர் சிந்தனை - இதுவும் குறியீடு தான்) சிந்தனையோடு இருவரும் ஒன்றாக பயணிப்பதே கதை.
இதில் கதாநாயகன் மிக மிக நல்லவன். பெண்களுக்கு ஆபத்தோ விபத்தோ நடக்கும் போது மனநிலை பாதிக்கப்பட்டிருந்தாலும் அதை எதிர்க்கும் அள்விற்கு புத்திசாலித்தனம் உடையவன். ஒரு பள்ளி மாணவி சைக்கிள் ஓட்டும் போது கீழே விழுகிறாள்.உடனே எச்சில் தொட்டு வைத்துக் கொள் என்று சொன்னதும் தொடர்ச்சியாக ஒரு பாட்டு.ராஜ்கிரண் பாணியிலான உப்புமூட்டை சுமக்கிறான்.கூழாங்கற்களைக் கொடுத்ததும் நெஞ்சில் செல்லமாக குத்தும் அசட்டுத்தனமும் உண்டு.கூழாங்கற்களுக்கு நான் குறியீடு சொல்லா விட்டால் நான் என்ன விமர்சகன்.நான் என்ன இலக்கில்லாவாதி.பொதுவாக நீர் ஓடிக் கொண்டேயிருக்கும் இடத்தில் மட்டும் தான் இந்த கற்கள் உருவாகும்.அது மாதிரி வாழ்க்கையில் நிறைய அடிப்பட்டால் நீயும் எல்லோரும் விரும்பும் கூழாங்கற்களாய் இருப்பாய் என்று மன நலம் பாதிக்கப்பட்ட மிஷ்கின் கதாபாத்திரம் சொல்கிறது.(உஸ் முடியல). அடுத்து புதுமணத் தம்பதிகள்.அவர்களை கேலி செய்பவர்களில் ஒருவனை பாட்டிலால் அடிக்கும் அளவிற்கு பெண்களுக்காக போராடுபவன்.அடுத்து கற்பழிப்பு மற்றும் கடத்தலில் சிக்கிக் கொள்ளும் பெண்களையும் காப்பாற்றுகிறான். இன்னும் ஒரு கிழவி தான் மிச்சம்.அதையும் செய்து கன்னத்தோடு கன்னம் வைத்தால் அடுத்த முதல்வர் மிஷ்கின் வாழ்க என்று நானே கோஷம் போடுவேன். ராமராஜன் படத்தில் ராமராஜனை ஒரு தலை பட்சமாக விரும்பும் பெண்ணை வில்லன் கெடுத்து விடுவான்.உடனே ராமராஜன் பொங்கி எழுந்து "தங்கச்சி" அவனை உனக்கு கட்டி வைக்காமல் ஒய மாட்டேன் என்று கிளம்பி விடுவார்.இதையே ரஜினிகாந்தும் செய்திருக்கிறார்.இங்கு விபச்சாரம் செய்யும் ஸ்னிக்தாவை அம்மா என்று சிறுவன் ஏற்றுக் கொள்கிறான். நம்ம நாயகன் பாஸ்கர் மணி என்ன செய்கிறான். அவன் புத்தி தெளிந்ததும் பேச மாட்டானா என்று ஏங்கும் ஸ்னிக்தாவைப் பார்த்து சிரித்து விட்டு எங்கே இன்னும் கொஞ்ச நேரமிருந்தால் கல்யாணம் செய்யும் நிலை வந்து விடுமோ என்று ஓடுவது போல் இருக்கிறது பாஸ்கர் மணியின் பலூன் விற்கும் வேகம். இதுவே அந்த பள்ளி மாணவியை சந்தித்திருந்தால் - என்ன நடக்கும். எச்சில் வைத்தாயா என்று கேட்டே காதல் வந்திருக்குமோ என்னவோ.
சிறுவனின் அம்மா இன்னொரு கல்யாணம் செய்து கொண்டதற்கு அடிக்கும் மிஷ்கின் அவன் அப்பாவை ஒன்றும் செய்யவில்லையே என்ன ஒரு ஆணாதிக்கம் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். அது ராமராஜன் போன்ற பெண்களுக்கு அறிவுரை சொல்வார்கள்.இதில் இவர் அடித்து விடுகிறார்.சரி போய் தொலையுது என்றாலும் மனசு கேட்க மாட்டேங்குதே.பைத்தியமாய் இருக்கும் அம்மாவிற்கு மொட்டை அடித்து குளிக்க வைத்து விடுதியில் சேர்க்கும் மிஷ்கினுக்கு இடுப்பில் இருக்கும் பேண்டை கட்ட தெரியாமல் போவது நல்ல நகைமுரண் தான்.
கூழாங்கற்கள்,மலைபாம்பு,வெள்ளை வீடுகள்,காலணிகளை மாற்றுவது எல்லாம் மிஷ்கின் மூளையில் உதித்திருக்கும் என்றால் நான் நம்பவே மாட்டேன்.நிறைய புத்தகங்களையும்,படத்தையும் பார்த்தாலே இந்த இழவு குறியீடுகளை வைத்து தொலைத்து விடலாம்.
இளையராஜாவிற்கு வருவோம். மிக பெரிய ஏமாற்றம்.ராமராஜனின் படத்தில் கூட இதை விட நல்ல பாடல்களிருக்கும்.நம் படைப்புகளைத் திருடினால் கதறும் மனசு அடுத்தவன் படைப்பைத் திருடினால் அறிவுஜீவி பட்டம் கொடுக்கிறது.பக்கத்து வீட்டில் எரியும் தீ நம் கூரைக்கு மாற எவ்வளவு நேரம் ஆகும். மிக திராபையான கிளிஷே காட்சிகளை எல்லாம் வைத்து நம் ஊருக்கு ஏற்றார் போல அடுத்தவனின் சிந்தனையைத் திருடும் கலையும்,அதற்கு ஆதரவாக ஒரு மூன்று இலக்கியவாதிகளுமிருந்தால் இழவு பேரரசு கூட அறிவுஜீவியாக மாறி விடலாம்.முக்கியமாக அவருக்குள் இருக்கும் நாயகன் கனவும் பலித்து விடும்.
ஜப்பானிய இயக்குனருக்கு நன்றி என்று போட்டு விட்டால் இந்த திருட்டு இல்லை என்று ஆகி விடாது. எதையுமே செய்யா விட்டாலும் பரவாயில்லை நான் அவர் கூட உட்கார்ந்து படம் பாக்கணும்,சில காட்சிகள் அப்படியே அவர் மாதிரியே எடுத்திருக்கிறேன் காரணம் அது தான் அவருக்கு செய்யும் கைமாறு விளக்குமாறு என்று பேசாமலே இருந்தாலே போதும்.அடுத்து உங்க யுத்தம் செய் மெமரிஸ் ஆப் மர்டஸ் என்ற கொரியன் படத்தின் காப்பியாமே.அந்த இயக்குனர் பக்கத்திலும் அமர்ந்து படம் பார்க்க உங்களுக்கு தோணும்.டிரிபியூட் செய்ய அப்படியே காட்சிகளை வைத்திருப்பீர்கள். பேசாமல் நன்றி என்று போட்டு விடுங்கள்.இன்னும் உங்கள் சார்பாக இன்னும் சிலர் வரலாம்.
மிஷ்கின் திறமையாக திருடுவது எப்படி,மாட்டிக் கொண்டால் எப்படி பேசுவது என்று உங்கள் உதவி இயக்குனர்களுக்கும் சொல்லி கொடுங்கள்.பாருங்க உங்க முன்னாள் உதவி இயக்குனர் பேங்க் ஜாப் படத்தை நாணயம்(பெயரை பாருங்கையா) என்று எடுத்து பப்படம் கொடுத்து விட்டார்.அதனால் உங்களை மாதிரி நேர்மையாக திருட சொல்லித்தாருங்கள்.
Saturday, December 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
வெகுவாக ரசித்தேன்...
படத்தையல்ல...
உங்கள் எழுத்துக்களை தல... (நானும் எலக்கியவியாதி ஆயிடுவேனோ...)
//நாணயம்(பெயரை பாருங்கையா)//
ஹிஹிஹிஹி... அதுலயாவது ஒரு நாணயம் இருக்கே....
கிளப்புங்க தல...
Romba aarachi pannuvingalo.
நீ தீருந்தவே மாட்டியா ராசா??? :)
மைனஸ் ஓட்டு நான் குத்தலப்பா...:)
Is this Irumbuthirai blog???
".ராஜ்கிரண் பாணியிலான உப்புமூட்டை சுமக்கிறான்.கூழாங்கற்களைக் கொடுத்ததும் நெஞ்சில் செல்லமாக குத்தும் அசட்டுத்தனமும் உண்டு.கூழாங்கற்களுக்கு நான் குறியீடு சொல்லா விட்டால் நான் என்ன விமர்சகன்.நான் என்ன இலக்கில்லாவாதி.பொதுவாக நீர் ஓடிக் கொண்டேயிருக்கும் இடத்தில் மட்டும் தான் இந்த கற்கள் உருவாகும்.அது மாதிரி வாழ்க்கையில் நிறைய அடிப்பட்டால் நீயும் எல்லோரும் விரும்பும் கூழாங்கற்களாய் இருப்பாய் என்று மன நலம் பாதிக்கப்பட்ட மிஷ்கின் கதாபாத்திரம் சொல்கிறது.(உஸ் முடியல)."
Why can't you understand the same situation like this
Sorry for typing in taminglish.
Andha kuzhangarkal ellathayum patthu adi patadhalla thaan appadi irukku. Andha madhiri thaan ippo namma ellam irukkom (oru vidhamana programmed life without knowing the truth). But unmaiya therinjika yaarum virumbardhu illa. Avaley (it means namma ellorum) oru kozhandha manasodu irukravana pakkum podhu neguzhum bodhu, namma myskin character solradhu??????
Explain pannanuma?
சில பேரை இது தான் காரனம் என்று சொல்லமுடியாமல் பிடிக்காமல் போகிறது. எனக்கு அப்படி பிடிக்காதவர் இந்த மிஷ்.
உங்கள் எள்ளல் (இது கூட இலக்கியவாதிகள் பயண்படுத்தும் வார்த்தை தான்) நடை நல்லாருக்கு.
hehe nice...I saw myskin's interview few mins in a TV channel... payapulla overa sound-a kodukkuthu...
I want to recommend you a korean movie "hearty paws" ... nice movie...
Post a Comment