உயிரோடை சிறுகதைப் போட்டிக்கு எழுதிய கதை!
கோபி புது படத்தின் கதை விவாதம் பொருட்டு மும்பை வந்திருந்தான் . கூடவே அவன் உதவியாளன் மற்றும் நண்பன் சங்கர் . கோபி நினைப்பதை புரிந்து கொண்டு நடப்பான் சங்கர். தயாரிப்பாளர் மும்பையை சேர்ந்த தமிழன். மும்பை வந்ததில் இருந்து மனதே சரியில்லை. அவள் ஞாபகமாகவே இருந்தந்து கோபிக்கு . கிளம்பும் போதே அவளுடைய முகம் இருண்டு போயிருந்தது .
அவள் - புஷ்பா வயது - 28 பொன்னிறம் . தொழில் - சினிமாவில் துணை நடிகை . தமிழ் சரியாக வராது .
கோபி உதவி இயக்குனராக இருக்கும் பொழுது பட வாய்ப்பு கேட்டு அறிமுகம் ஆகிருந்தாள்.
பின் தொடர்ந்து வந்த பழக்கத்தால் அவள் பெயர் கோபியின் கணினியின் கடவுச் சொல்லாக மாறி இருந்தது .அவளை தொடர்பு கொள்ள தொடர்ந்து அலைபேசியில் முயற்சித்து கொண்டே இருந்தான் . தொடர்ந்து துண்டிக்க பட்டுக்கொண்டே இருந்தது .படம் வெளியாகும் பொழுது அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலே எப்பொழுதும் அலைந்தான் . சங்கருக்கு அவளை கொஞ்சம் கூட பிடிக்காது .
***************
சங்கர் பதற்றத்தோடு அறையில் இருந்து அழைத்தான்." கோபி இங்க பாரு... "
உள்ளே நுழைந்தால் தொலைக்காட்சில் ஒரு புது படத்திற்கான பூஜை நேரலையாக ஒளிப்பரபாகிக் கொண்டு இருந்தது. அந்த படத்தின் இயக்குனர் குமரன். கோபியும், குமரனும் ஒரே இயக்குனரிடம் உதவியாளர்களாக இருந்தார்கள் சில வருடங்களாக .இருவரும் நேரெதிர் சிந்தனை, எண்ணம் கொண்டவர்கள் .
சினிமாவில் கவர்ச்சியே தேவை இல்லை என்று கோபி சொன்னால் குமரன் கவர்ச்சி தேவை என்று அரை மணி நேரம் வாதிடுவான். எந்த விஷயத்திலும் இருவருக்கும் ஒத்து வராது. குறிப்பாக பெண்கள் விஷயத்தில் என்றே நினைத்திருந்தான் கோபி .ஆனால் இன்று பொய்யாக மாறி இருந்தது. காசு,வாய்ப்பு வந்த பிறகு கொள்கையாவது மண்ணாவது .குமரனோடு புஷ்பா நின்று கொண்டு இருந்தாள்.
குமரனை அலைபேசியில் அழைத்தான் கோபி .அவன் எடுத்த மறுநொடி " அவ கிட்ட கொடு... நான் உடனே பேசணும்..."
"புஷ்பா ஏன் இப்படி பண்றே..."
"........"
"Yes u r right... Still i am worthless for a penny...then why are staying with me for last 2 years..."
"past is past..."
"you ....." என்று வார்த்தையை சொல்லும் முன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
கோபிக்கு ரொம்ப அவமானமாக இருந்தது
சங்கர் ஆறுதல் சொல்லி கொண்டு இருந்தான் ." நான் அப்பவே சொன்னேன்... நீ கேட்கல... சோத்த கூரையில போட்டா ஆயிரம் காக்கா வரும்... போகும்... அதுல ஒன்னுதான் புஷ்பா... விடு மச்சான்..."
குமரனை பற்றி நினைத்த பொழுது சில வருடங்களுக்கு முன்னால் நடந்த விவாதம் ஞாபகத்திற்கு வந்தது .
இயக்குனர் ஒருநாள் இருவரிடமும் நண்பன்,எதிரி பற்றி உங்களுடைய கருத்து என்ன என்ற பொழுது
கோபி சொன்னது
நண்பன் - நம் இரகசியங்கள் தெரிந்த எதிரி (என்றாவது மாறினால் )
எதிரி - நமக்கு பிடிக்காத நண்பன் (யாருக்கோ அவன் நண்பன் தானே) என்ற விவாதம்
குமரன் சொன்னது
நண்பன்,எதிரி - அது என் முடிவை பொருத்தது.
இனி நண்பன் என்றால் குமரன் (இரகசியங்கள் தெரிந்த எதிரி ) என்று எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டான் .
********************
அவள் போனதிற்கு என்ன காரணமாக இருக்கும்? பணம்? புகழ்? யோசித்து யோசித்து கோபம் தான் மிச்சம்.கோபிக்கு கோபத்தில் மனம் ரொம்ப தகித்தது.
உடம்பு சரி இல்லாத பொழுது மனம் பெண்ணின் அருகாமையை நாடுகிறது .மனம் சரி இல்லாத பொழுது உடம்பு பெண் துணையை தேடுகிறது .(Human mind is reversly proportional to Human Body)
சங்கர் அதை புரிந்து கொண்டவனாக விடுதியின் மேலாளரிடம் சொல்லி விட்டு வந்தான் .
கொஞ்ச நேரத்தில் அறை கதவு தட்டப்பட்டது .
சங்கர் கதவை திறந்தவுடன் பெண் உள்ளே வந்தாள்.
வந்தவுடன் சங்கரை பார்த்து கத்த ஆரம்பித்து விட்டாள் " தூ பாகல் ஹை... தோ ஆத்மி ..........."
" ஹிந்தி மாலும் நஹி..." என்ற சங்கரை பார்த்து
" I just can't imagine the situation with two people come one by one ..." எண்டு கூறினாள்.
"u mistake... not me... only he and u..." என்று சங்கர் உளறி வைத்ததை பார்த்து
"என்ன தமிழா... அப்ப நீ கிடையாதா..."
"மீ டூ... சீ... நீ விருப்பட்டா..." என்று சங்கர் வழிந்து கொண்டு இருந்தான் .
சங்கரை வெளியே அனுப்பி விட்டு அவளை பேச விடாமல் இழுத்து அணைத்தான் கோபி. பிறகு ஏதோ ஞாபகம் வந்தவனாக " போயி குளிச்சிட்டு வா... வரும் பொழுது இந்த புடவையை கட்டி கொண்டு வா..." என்று ஒரு புது புடவையை கொடுத்தான்.
புடவை புஷ்பாவிற்காக தாதரில் கடை கடையாக தேடி எடுத்தது.
அவள் வந்தவுடன் " உன் பெயர் என்ன..." என்ற கோபியை பார்த்து
"ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு மாதிரி கூப்பிடுவாங்க... மாமா என்ன கேசுன்னு சொல்வான்... ஒருத்தன் ஐட்டம்ன்னு... ஓடி போன பொண்டாட்டி பேர்ல... உனக்கு எப்படி கூப்பிடனுமோ அப்படி கூப்பிடு..."
"நீ எப்படி இந்த தொழில்ல..."
"ஏன் புருஷன் வியாபாரம், தொழில்ன்னு அலைவார்... எங்கிட்ட பேச கூட நேரம் கிடையாது... ஒருத்தன் ஆசை வார்த்தையில நம்பி வந்தேன்... கடைசிலே இப்படி ஆயிருச்சி... "
"சங்கர்... சங்கர்..."
"அது சரி அவன் யாரு..."
"சங்கர் என் உதவியாளன்..."
"இந்த விஷயத்திலும் உதவியா?"
"சீ வாய மூடு... " புஷ்பாவை போல இவளும் ஒருத்தனை ஏமாற்றி இருக்கிறாள் என்ற கோபத்தில் கத்தினான் கோபி.
சங்கர் வந்தவுடன் " சங்கர் நான் வெளியே போறேன்... இரண்டு மணி நேரம் கழித்து வருகிறேன்... அதுக்குள்ள இவள துரத்தி அடிச்சிரு..."
"அப்போ நான் வேண்டாமா..." என்ற அவளிடம்
"குரங்கை மறக்க
கழுதையுடன் கூடலா ?
அது ஏத்திய பொதியை
எந்த காசியில் தொலைப்பது? "
"ஏய் யார பார்த்து கழுதங்ற... இப்போ நான் என்ன பண்ணட்டும்... உன்னால முடியாதுனா நேரா சொல்லு..."
"என்ன ஒன் புருசனா நினைச்சிக்கோ... அவன உன்ன ஏமாத்தின ஒருத்தனா நினைச்சிக்கோ... அப்படியே நான் வர்துக்கு முன்னாடி ஓடி போயிரு..." என்று அவளிடம் கத்தினான் கோபி.
"ஏன் என்னாச்சு..." எண்டு சங்கரிடம் கேட்டு கொண்டு இருந்தாள் .
"லவ் பெய்லியர்..."
"பின்ன இப்படி பேசுனா... எவ இருப்பா ? " என்று கத்தி கொண்டு இருந்தது அறை வெளியே இருந்த கோபிக்கு கேட்டது.
************
கோபி கால் போன போக்கில் சுற்றி கொண்டு இருந்தான் . அப்பொழுது பலத்த மழை வந்து விட
ஒரு மணி நேரம் முன்னதாகவே அறைக்கு திரும்பி இருந்தான் .
மாற்றுச் சாவி கொண்டு கதவை திறந்து வந்தவனுக்கு ஹாலில் கிடந்த சேலை அவனை வரவேற்பு கொடுத்தது.அது அவன் புஷ்பவிற்காக எடுத்தது. கொஞ்ச நேரம் முன்பு வந்தவளிடம் கொடுத்தது .
உள்ளறையில் சங்கரும் அவளும் பேசி கொண்டிருந்ததை கேட்க நேர்ந்தது.
"என்ன அவன் உண்மையிலே ஆம்பிள தானே? என்கிட்டே " வந்து இப்படி நடந்துகிட்ட ஒரே மனுஷன் அவன் தான்..."
"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை... அவனுக்கு ஏதோ மனகஷ்டம்... அதான் அப்படி நடந்துகிட்டான்..." எண்டு சங்கர் சொல்லி கொண்டு இருந்தான் .
புஷ்பா பிரிந்து போனதற்கு இவள் சொல்வது கூட ஒரு காரணமாக இருக்குமோ என்று நினைத்து வாய் விட்டு அழ ஆரம்பித்தான் கோபி. கையில் அந்த சேலை இருந்தது .
Saturday, June 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
முதலில் இருந்த முடிவு என்னை படிக்கும் , பிடிக்கும் நான்கு உள்ளங்களுக்காக முடிவு மாத்தப்பட்டுள்ளது .
பழைய முடிவு இதோ இங்கே
கோபி ரொம்ப குழம்பி இருந்தான். நிறைய நாட்களுக்கு பிறகு வானத்தை பார்த்தான்.மிக தெளிவாக இருந்தது.
"பாரு உன் பேரன... எப்படி கஷ்ட படுறான்னு..."
கஷ்டம் வரும் போதெல்லாம் வானத்தை பார்த்து சொல்வான். பாட்டியிடம் சொல்வதாகவே நினைத்து கொள்வான்( பாட்டி உயிரோடு இருந்த பொழுது இருவரும் எலியும் பூனையும் தான்)
கொஞ்ச நேரத்தில் வானம் இருண்டு மழை பெய்ய ஆரம்பித்தது.
மழை கோபிக்கு ரொம்ப பிடிக்கும். மழையோடு அழுதால் யாருக்கும் தெரியாது .(இது சார்லி சாப்ளினிடம் கற்று கொண்ட பழக்கம் )
அழுகையும், கண்ணீரும் குறைய ஆரம்பித்த பொழுது மழை தூவானமாக மாற்றி இருந்தது.
மழை நின்ற பிறகும்
தொடரும் தூவானம்!
காதல் துறந்த பிறகும்
உன் நினைவு துரத்துதே
"சோத்த கூரையில போட்டா ஆயிரம் காக்கா வரும்... போகும்... " என்ற சங்கரின் வார்த்தைகள் காதில் எதிரொலித்து கொண்டே இருந்தது.
மழை முற்றிலும் நின்ற பிறகு வானத்தை பார்த்தான் கோபி. வானம் கலங்கி இருந்தது.பாட்டி அழுததாக நினைத்து கொண்டான்.அவன் மனம் தெளிவாக இருந்தது.
முடிவையே மாத்தியாச்சா...சரி வெரிகுட்...
thanks ravi
Post a Comment