Wednesday, June 3, 2009

வன்முறையின் தொடக்கம்

இதுவரை பயிற்சி கொடுப்பதிலும் ,கட்டளை இடுவதிலும் காலத்தை ஓட்டி கொண்டிருந்த சரணுக்கு இது பெரிய வாய்ப்பு. கடைசி கட்டத்தில் ஏதோ அவசர வேலையாக விக்ரம் தீவிரவாதி முகாம்களை அழிக்கும் பொறுப்பில் இருந்து விலகி இருந்தான். அந்த பொறுப்பு தற்சமயம் சரணுக்கு கொடுக்கப்பட்டது . அதுவரை விக்ரமின் மூளையாக இருந்த சரண் மிக சாதுர்யமாக மிச்சம் இருந்த ஏழு முகாம்களை அழித்து இருந்தான் . இந்த வெற்றியால் சரணுக்கு மேஜர் என பதவி உயர்வு கிடைத்தது .

வெற்றியும் ,பதவி உயர்வும் தந்த போதையில் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைமை சரணுக்கு. அடுத்த கட்டமாக பக்கத்துக்கு ஊரில் அடிக்கடி தாக்குதல் நடத்தும் மக்கள் இயக்கத்தை ஒடுக்கும் வேலை கொடுக்கப்பட்டது . விக்ரம் இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தான் .

" என்கிட்டே குடு. நீ வழக்கம் போல யோசனை சொல்லு இது வேண்டாத வேலைன்னு எனக்கு தோனுது "

"விக்ரம் நாந்தான் இப்ப மேஜர் . எல்லா முடிவையும் நாந்தான் எடுப்பேன் . நீ சும்மா வேடிக்கை மட்டும் பாரு "

" நமக்கு இங்க வேற வேலை இருக்கு நாம ஏன் அவங்களுக்கு உதவி செய்யணும் "

" சாகசம் பண்ணலாம் . மலை,ஆறு ,கடல் இப்படி எல்லா இடத்துலயும். நீ கொஞ்ச நேரம் உன் வாய பொத்திக்கிட்டு இரு "

"என்னவோ பண்ணு சரண் "

போன தடவை போல் இல்லாமல் இது எங்களுக்கு புதிதாக இருந்தது . மரண அடி வாங்கி கொண்டு இருந்தோம் . அரிதாக நங்கள் சில இடங்களில் அவர்களை துரத்தி அடித்து இருந்தோம் .அவர்கள் கொரில்லா தாக்குதல் செய்ததில் எங்களுடைய ஆயுதம் ,சாப்பாடு மிகவும் குறைந்து இருந்தது .

என்னுடைய கோபம் அப்பாவி மக்கள் மீது திரும்பி இருந்தது . விக்ரம் எச்சரித்து கொண்டே இருந்தான் .

" சரண் நம்ம கிட்ட பிரச்சனை செய்யாத மக்களை சுடாதே "

"எதிரின்னு வந்துட்டா எல்லாரும் ஒன்னுதான் திரும்பவும் சொல்றேன் வேடிக்கை மட்டும் பாரு "

சில நேரத்தில் சரண் யோசனையை விக்ரம் கேட்க மாட்டான்.அந்த கோபத்தை சரண் இப்பொழுது காட்டி கொண்டு இருந்தான் .

" நாம இப்படி சரண் அடைஞ்சவன் கூட பாக்காம சுட்டா அவன் உயிர தப்பிக்க நம்ம எல்லாரையும் திருப்பி சுடுவான் சரண் "

"அவன விட்டு வைச்சாலும் இதை தான் செய்வான் விக்ரம் "

விக்ரம் பேச்ச கேட்காம அப்பாவி மக்களை ஆண் ,பெண், குழந்தைன்னு பாக்காம எல்லாரையும் சுட்டு தள்ள ஆரம்பிச்சான் சரண் .

"டேய் அவங்க வெடிகுண்டு வீசுறாங்க. இன்னும் ஒரு நிமிசத்துல இந்த இடத்தை காலி பண்ணனும். சீக்கிரம் ஓடி வா சரண் "

வெடிகுண்டு வீசியதில் எங்களின் முக்கிமான ஒரு நபரை கொன்று இருந்தார்கள் .

" நான் அப்பவே சொன்னேன் கேட்டியா இப்போ எல்லாம் போச்சு எல்லாம் உன்னால தான்டா ___ "

"விக்ரம் மரியாதையா பேசு "

இது நடந்து பதினெட்டு நிமிடத்தில் அவர்களை அழிக்க உதவி செய்யப்பட்டு மக்கள் இயக்கத்தை கிட்டதட்ட அழித்து இருந்தார்கள் .

"உனக்கு என்னடா மரியாத ___ சொல்ல சொல்ல கேட்கலியே "

வந்த கோபத்தில் கையில் இருப்பதை எல்லாம் கீழே போட்டு விட்டு விக்ரமுக்கு நாலு அடி அடித்து விட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தான் சரண் .

******

"யம்மா இங்க பாரு தப்பு தப்பா கேம் விளையாடி நான் ஸ்கோர் பண்ணதே எல்லாம் கெடுத்துட்டான் . அவன் பேர பாரு கர்னல் சரண்ணு சேவ் பண்ணி இருக்கான் . கான்ஸ்டபிள் ஆக கூட துப்பு கிடையாது . ஒழுங்கா விளையாடு சொன்னதுக்கு என்னை அடிச்சிடான் " என்று அம்மாவிடம் அழுது கொண்டே சொன்னான் விக்ரம் .

"சரி அழாதே அண்ணன் தானே செஞ்சான் . திரும்ப விளையாடு "

"சும்மா அவனுக்கே சப்போட் பண்ணாதே. நான் அப்பவே சொன்னேன் அந்த போனஸ் லெவல் விளையாட வேண்டாம்ன்னு அவன் கேட்கல என்னை அடிச்சிட்டு கேம்ல ஒரு பைல்ல வேற டெலிட் பண்ணிடான் "

"பின்ன அவன்கிட்ட ஏன் விளையாட கொடுத்த "

"பாத்ரூம் போயிட்டு வரதுக்குள்ள அவன் இடத்த புடிச்சிடான் "

"திரும்ப அந்த கேம்ம கம்ப்யூட்டர்ல போட முடியாதா ? "

"சரி பண்ண ரொம்ப நேரம் ஆகும்மா முதல்ல இருந்து இன்ஸ்டால் பண்ணனும் " என்ற விக்ரமை அணைத்து கொண்டாள் அம்மா .

******

இப்படி கதையை முடித்தாலும் இதில் இலைமறை காய்மறையாக சொல்லி இருக்கும் கடைசி இருவத்தைந்து ஆண்டு கால ஈழ போராட்டம், இந்தியாவின் தலையீடு , ராஜீவ் படுகொலை , வன்முறையின் தொடக்கம் எல்லாம் மக்களுக்கு புரியுமா ? என்று கதை சரி பார்த்துக் கொண்டிருந்த எழுத்தாளன் மனதில் தோன்றி மறைந்தது .

"கதையில் வர்ற அந்த விக்ரம் கேரக்டர் சொன்ன மாதிரி இந்த உலகத்த திரும்ப படைச்சா தான் அந்த பழைய அமைதியான இலங்கையும் , செத்து போன மக்களும் திரும்ப கிடைப்பார்களா ? அதுக்கு ரொம்ப காலம் ஆகுமா ? " என்று யோசித்து கொண்டே படுக்க சென்றான் .

******

'(உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)

4 comments:

வில்லங்கம் said...

Nalla irruku aana lite'a puriyala !!

கோபிநாத் said...

நல்ல முயற்சி...நீங்க நிலாரசிகனோட கதையை படிச்சிங்களா!!

போட்டியில் வெற்றி பெற வாழ்த்ததுக்கள் ;)

இரும்புத்திரை said...

thanks gopinath

இரும்புத்திரை said...

thanks jk