Friday, December 24, 2010

மன்மதன் அ(சொ)ம்பு

மன்(னார்) மதன்(கோபால்) அம்பு(ஜம்) இப்படி ரொம்ப வித்தியாசமாக தலைப்பு யோசித்த அளவுக்கு கதையை யோசித்திருந்தால் கொஞ்சம் நல்லாயிருந்திருக்கும். படம் தொடங்கும் போதே கமல் அவர் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்து விட்டார். நிஷா (அம்பு - சொம்புவின் திரைவுலகத்தில் இந்த பெயர்) பாரிஸ் செல்கிறார். நிஷாவின் ரசிகர் சொல்கிறார் - " நான் நல்லா நடிப்பேன்.எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க.உங்க கால் செருப்பா கூட நடிப்பேன்." அதற்கு சங்கீதா(சங்கு ஊதற வயசுல சங்கீதா) "வலது கால் செருப்பா இடது கால் செருப்பா." இது மாதிரி வலிமையான நகைச்சுவை காட்சில் படம் முழுவதும் நிரம்பிக் கிடக்கிறது. இது மாதிரியான காட்சிகளை ரசிக்க முடியாத அளவிற்கு அதீத ரசனைக் குறைபாடு வந்து விட்டதே என்று மனம் வெம்பி சாக கிடந்தேன். உதயநிதி ஸ்டாலின் ஏன் படத்தை கை மாற்றி விட்டார் என்ற சந்தேகம் வந்ததுமே தப்பித்திருக்க வேண்டும். விதி வலியது. ஒண்ணு மட்டும் சொல்றேன்ல எத்தனை சாரு வந்து உங்களைக் கிழி கிழி கிழிச்சாலும் நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்க. அது மட்டும்தாம்லே உண்மை. மன் - அம்பு இந்த வார்த்தைகளைப் பெரிய பாண்ட் போட்டவுடனே மாதவன் தெரிந்திருக்க வேண்டாமா. எப்படியிருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்க மாதவன். 3 இடியட்ஸ் நடிச்சப்போ கூட நீங்க முட்டாளா எனக்கு தெரியல.ஆனா கமல் படம்னு நம்பி வந்த உடனே தான் தெரிஞ்சுது நீங்க எவ்ளோ பெரிய முட்டாள்னு.ரமேஷ் அரவிந்த் உங்களுக்கு மும்பை எக்ஸ்ப்ரஸ் படத்தில் வாங்கியும் தெரியல போல.

இன்னொரு வசனம்.யப்பா முடியல.திரிஷா மேல மாதவன் சந்தேகப்படுறார். திரிஷா தப்பு செய்ய கேரவன் எல்லாம் வேண்டாம். அதுக்கு வெளிநாடு தான் போவேன்னு ஒரு வசனம் (உபயம் கமலஹாசன்) சொல்வார். அப்படியே கொலைவெறி வந்து "மை டாடி இஸ் நாட் இன் தி குதிர்னு சொல்லாதீங்க கமல்னு கத்தணும் போலயிருந்தது.

கமலுக்கு அவருடைய தோல்விப்படங்கள் எல்லாம் இன்னும் மண்டையில் குடைச்சல் குடுக்குது போல. ஆளவந்தான் படத்தில் வரும் காஷ்மீர் வெளி நாட்டவர் கடத்தல் அதை மீட்கப் போகும் கமல் டீம் இதிலும் கமல் டீம் போகிறது.பாடலை எடுத்து விட்டு ரிவர்ஸில் ஓட விட்டுயிருக்கிறார்கள். நீலளளளளளளளளளளளளளளள வானம். இனி இதை கமல் கண்டுப்பிடித்தது மாதிரி பேசுவார்கள். அதெல்லாம் பத்து வருடம் முன்பு குமுதம் ஒரு பக்க கதையில் வந்த தீம். (முதல் பட இயக்குனர் நாயகிக்கு காட்சியை விளக்கிறார். நாயகிக்கு குழந்தை கிடையாது. ஒரு ஆழகான குழந்தை ஒவியம். அதை படுத்து உருண்டு புரண்டு கலைக்க சொல்கிறார். நாயகி யோசிக்கிறாள். இயக்குனர் சொன்னதை மட்டும் செய்யுங்கள் என்று சொல்ல மனமே வராமல் கலைக்கிறாள். ப்ரிவியூவின் போது அந்த காட்சி ரிவர்ஸில் ஓடுகிறது. கலைந்த கோலப்பொடியைப் படுத்து புரண்டு அழகான குழந்தை ஒவியமாக மாறுகிறது.) அடுத்து குணா படத்தில் அறையைச் சுற்றி வந்து கவிதை பேசுவார். அது மாதிரி சுற்றி வந்து திரிஷாவிடம் கவிதை சொல்கிறார். திரிஷாவின் சொந்த குரலில் கவிதை படிக்கும் போது யாரோ சம்மட்டியால் தலையில் அடிப்பது போலுள்ளது. இதுல கூட சங்கீதா வேற. வாத்து மாதிரி ஒரு நடை. இவ்வளவு திராபையான நாயகியை எந்த சினிமாவிலும் சமீபத்தில் பார்க்கவில்லை. கமல் கூட நடிச்சாச்சி. இனி ஒய்வு எடுக்க வேண்டியது தான். அடுத்து ஹேராமில் வருவது போல கொலை,அஹிம்சை என்று பேசி இம்சை செய்கிறார். தோல்வியடைந்த படங்கள் அவர் காதில் ரீங்காரமிடுகிறது போல.

(ஏலே எவம்ல அது நீ மட்டும் ஒழுங்கான்னு கேக்குறது.ஒரே ஒரு காதல் தோல்வியை வச்சிக்கிட்டு எப்போ கதைன்னு ஒண்ணு எழுதினாலும் லிப்ஸ்டிக் கறை,ரத்தக்கறை,வெள்ளைச்சட்டைன்னு நீயும் எழுதுவ தானே.உன் காதுல இதெல்லாம் கேக்காதாலேன்னு கத்துறது.வந்தேன் பிச்சிப்புடுவேன் பிச்சி.)

இந்த கவிதையைத் தூக்கணும்னு கோர்ட் கேஸ் வேற.முதல்ல அது கவிதையான்னு கண்டுப்பிடிக்க மனு கொடுக்கணும். திரிஷா பாடும் போது கேட்டா காதுல ரத்தமே வருது. தமிழ் மொத்தமா செத்துருச்சி. கடைசியா எதுக்கு கப்பல்,பிரான்ஸ்,ஏதேன்ஸ்,பார்சிலோனா எல்லாம்.இந்த கதையை தான் சிவகுமார், நதியாவை வைத்து எடுத்து விட்டார்களே.சிவகுமார்,நதியா,சுரேஷ் நடிச்ச படத்தோட ரீமேக் போல.

சுரேஷை சிவகுமார் கார் விபத்தில் தெரியாமல் கொன்று விட,சுரேஷின் காதலியான நதியாவை சிவகுமார் எப்படி கல்யாணம் செய்து கொள்கிறார் என்பது தான் கதை.

இங்க தோசையைத் திருப்பி போட்டு இருக்காங்க. கமலின் மனைவியைத் திரிஷா கொன்று விட (அட தெரியாமல் கார் விபத்தில் தான்) மாதவனின் காதலியான திரிஷா கமலை கல்யாணம் செய்து கொள்கிறார்.

கமல் முன்னாடி எல்லாம் ஹாலிவுட் படத்தைத் தான் சுட்டதா சொன்னாங்க.இப்போ தமிழ்ப்படத்தையா. டூ பேட் கமல்.இருங்க சாரு கிட்ட போட்டு குடுக்கிறேன்.பாதி காசாவது திரும்ப தாங்க.பாதி விமர்சனம் வாபஸ்.

இதை இன்னொரு மும்பை எக்ஸ்பிரஸ்னு கணிச்சி சொன்ன பின்னூட்டப் புயல் ஜெமோ புகழ் ராம்ஜி யாகூவிற்கு நன்றி. உதயநிதி நீங்க ஒரு புத்திசாலின்னு மட்டும் எனக்கு தெரிஞ்சது. நெக்ஸ்ட் இளைஞனாமே.அதுவும் பொங்கலுக்கு.

8 comments:

நீ தொடு வானம் said...

//(ஏலே எவம்ல அது நீ மட்டும் ஒழுங்கான்னு கேக்குறது.ஒரே ஒரு காதல் தோல்வியை வச்சிக்கிட்டு எப்போ கதைன்னு ஒண்ணு எழுதினாலும் லிப்ஸ்டிக் கறை,ரத்தக்கறை,வெள்ளைச்சட்டைன்னு நீயும் எழுதுவ தானே.உன் காதுல இதெல்லாம் கேக்காதாலேன்னு கத்துறது.வந்தேன் பிச்சிப்புடுவேன் பிச்சி.)//

கோபால் கோபால் என்னை சித்ரவதை செய்யாதீங்க கோபால்

இரும்புத்திரை said...

சட்டி அகப்பை - இருக்கிறது தான் வரும்.என்னை சொன்னேன் கோபால் கோபால்.

Vikram said...

அந்தப் பாடல் எனக்கு பிடிக்காமல் போனதற்கு த்ரிஷா குரலே காரணம் - why blood ?? same blood !!!
தெலுங்கில் சின்மயி பாடியிருக்கிறார்!!! முடியல..

saba said...

Are you mad?always you give bad comments....... Stupid from now onwards I don't like to read ur blogs bye......

DR said...

நான் இன்னும் படம் பாக்கலை. படம் பத்திட்டு வந்து பேசுறேன்...

Vikram said...

நீல வானம் பாட்டு ரொம்ப பிடிச்சிருக்கு... the lip sync to the video played in the reverse is hard to believe..

Vikram said...

http://www.youtube.com/watch?v=Hr1HpRQsb3Q

vaasu said...

நீ என்ன சாருக்கு ஜால்ராவா?