தீடிரென இந்த வன்மம் எங்கிருந்து கொப்பளித்தது எனக்கு ஆச்சர்யமாகயிருந்தது. நிச்சயம் இன்று வந்திருக்க வாய்ப்பில்லை.எங்கோ அடிமனதில் ஒளிந்திருந்தது இன்று வெளியே வந்திருக்கிறது இவன் மூலமாக. ஆழ்மனதில் இதுவரை என்னை துரத்திய சித்ரவதைகளை செயல்படுத்தவே இந்த வேலையில் நான் சேர்ந்திருக்கலாம். மனதளவில் இன்னமும் குழந்தையாகவேயிருக்கும் பெண்ணைக் கற்பழித்து விட்டு சட்டம் செய்கிறவனை என்ன செய்வது என்றே தெரியாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தது மனது.
"நான் யார் தெரியுமா..அந்த பொண்ணுக்கு பதினெட்டு வயசு முடிஞ்சு நாலு மாசம் ஆகுதுன்னு டேட் ஆப் பெர்த் காட்டுவேன்.." கத்திக் கொண்டிருப்பவனை இங்கேயே சுட்டால் என்ன.தோணிச்சி ஆனா செய்ய முடியாது.ரத்தமாக கிடந்தவள் நினைவுக்கு வந்து வந்து போனாள்.
டீக்கொண்டு வரும் பையனிடம் ஜாடை காட்டினேன்.பேசிக் கொண்டிருந்தவன் மேல் சூடாக டீயைக் கொட்டி விட அவன் பிடிக்கும் முன் பையன் போக்கு காட்ட,பேப்பர் வெயிட் தூக்கி அடிப்பது மட்டும் தான் தெரிந்தது. ஏதோ நெற்றியில் வெடித்தது போல ஒரு உணர்வு. மயக்கத்தில் கூட அவனை என்ன செய்யலாம் என்பது மட்டும் தான் ஓடிக்கொண்டிருந்தது. சின்ன வயதில் காளை மாடுகளுக்கும், கறிக்காக வளர்க்கப்படும் கொழுத்தப் பன்றிகளுக்கும் துடிக்க துடிக்க செய்வது நினைவுக்கு வரவும் முழிப்பு வந்து விட்டது.
வெறி தீரும் மட்டும் அவனை அடிக்க சொல்லி விட்டு வலிக்கு ஊசி போடுவது போல அவனுக்கு கொடுத்த சரக்கில் மயக்க மருந்தை கலக்க சொல்லியிருந்தேன்.பாத்ரூம் எங்கே என்று செய்கையில் கேட்டவனுக்கு கையை காட்டினேன். எங்காவது மயங்கி சரிவான் என்று தெரிந்தே பின் தொடர்ந்தேன். ப்ளஸ் 1 படிக்கும் போது தவளையும்,எலியையும் அறுத்து அறுத்து விளையாடியிருந்தது ஞாபகப்படுத்திக் கொண்டு பன்றிகளுக்கு அவர்கள் செய்ததை நான் இவனுக்கு செய்திருந்தேன். இனி எந்த பெண்ணுக்கும் வயது சான்றிதழ் தேவைப்படாது என்று நினைத்துக் கொண்டேன்.
காலையில் எழுந்த போது ஸ்டேஷனே கொஞ்சம் களேபரமாகயிருந்தது.
"யோவ்..என்னய்யா ஸ்டேஷன் இது..சேகர் ஆளு அவன்..இந்த அடி அடிச்சிருக்கீங்க..அதோட விட வேண்டியது தானே..யாரு இப்படி பண்ணது..அடுத்த மாசம் கல்யாணம் அவனுக்கு.."
"சார்..அவன் பேப்பர் வெயிட் எறிஞ்சதுல எனக்கு இப்போ தான் மயக்கமே தெளிஞ்சுது..என்ன நடந்தது சார்.."
மெதுவாக அடிக்குரலில் எஸ்.பி சொல்லி விட்டு "நீ தான் பண்ணியிருப்பன்னு தெரியும்.." பின் சத்தமாக சொல்லும் போது "டாய்லட் போகும் கீழே விழுந்து அவனுக்கு படக்கூடாத இடத்தில அடிப்பட்டுருச்சியா..ஒருத்தனை அரெஸ்ட் பண்ணினா பொறுப்பா பாத்துக்க வேண்டாம்.."
"சார் இனிமே அப்படி நடக்காம பாத்திக்குவேன்.."
"கிழிச்ச..உன் மேல விசாரணை கமிஷன் இருக்கு..வேற வேலை தேடுற வழியப் பாரு.."
வீட்டிற்கு போனால் எஸ்.பி எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்.
"என்ன கோபமா..நீ ஏதாவது செய்வேன்னு தெரியும்..இப்படி செய்வேன்னு தெரியாது..நம்ம ஆளுங்க தான் விசாரணை கமிஷன்ல இருப்போம்..பார்த்துக்கலாம்.."
நெற்றி தெரிந்த வலியினால் தொட்டுப் பார்த்தேன். வீக்கம் குறைய தொடங்கியிருந்தது.கூடவே வன்மமும்.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
வன்மம்(இங்கில்) முக்காத குறிப்பு - இதில் வரும் பெயரும்,சம்பவங்களும் கற்பனையே.அதையும் மீறி இந்த கதையில் வரும் நபர்களின் பெயரில் படிப்பவர்களுக்கு பக்கத்து வீட்டிலோ,பக்கத்து தெருவிலோ,பக்கத்து மாவட்டத்திலோ,ஏன் பக்கத்து உலகத்திலோ இருந்தால் ஆசிரியர் பொறுப்பேற்க முடியாது.
ஈசன் பார்த்தாச்சா
அங்கங்க லாஜிக் இடிச்சாலும், சுருக்கமா நல்லாருக்கு.
எங்க இடிக்குது.சொல்லுங்க டிங்கரிங் பண்ணிருவோம்.
நிஜம் போல உணரவைக்கும் எழுத்து நடை
Post a Comment