தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பாவது கலைஞர் தி.மு.க எம்.பிகளை ராஜினாமா செய்ய சொல்லி இருந்தால் இந்த தேர்தலில் கூட தி.மு.க எம்.பிகள் மகத்தான வெற்றியை பெற்று இருப்பார்கள் . காங்கிரஸ் தி.மு.க ஆட்சியை தமிழகத்தில் கவிழ்த்து விடும் என்று பயந்து அவர்களுடன் கலைஞர் ஒன்றும் செய்யாமல் இருந்து விட்டார்.
எம்.பிகள் ராஜினாமா செய்ய போவதாக சொல்லி மக்களிடம் ஒரு புன்சிரிப்பை ஏற்படுத்தி இருந்தார். ஆனால் கடைசியில் அது பெரும் சிரிப்பாய் ஊர் சிரித்தது .கடை அடைப்பு மற்றும் உண்ணாவிரதம் வெற்றி பெற்றதாக நினது கொண்டு இருக்கிறார். அதற்கு பதில் நீங்கள் தமிழகத்தில் ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்தித்து இருந்தால் உங்கள் மைனாரிட்டி அரசு மெஜாரிட்டி அரசாக மாறி இருக்கும். அந்த சந்தர்ப்பதை இழந்து விட்டார் . இந்த முறை உங்களுக்கு விழ வேண்டிய பல ஓட்டுக்கள் திடீர் தமிழீழத்தாய்க்கு மாறி விழ கூடிய சூழலை ஏற்படுத்தி விட்டார் கலைஞர்.
இப்பொழுது எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்து அவரது ஆட்சி மைனாரிட்டி அரசாகஇருந்தால் அவர் ஆட்சியை கலைக்க தயங்கி இருக்க மாட்டார். அதனால் தான் அவர் ஆட்சியில் இருந்த காலத்தில் கலைஞர் எதிர் வரிசையிலே அமர்ந்து இருந்தார்.
காங்கிரஸ் ஒரு பச்சோந்தி .அவர்கள் தேர்தலில் போதுமான எம்.பிகள் வேண்டும் என்றால் அதிமுகவிடம் கூட்டணி வைக்க தயங்க மாட்டார்கள். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அதிமுக வைக்கும் ஒரே வேண்டுகோள் தமிழகத்தில் வாபஸ் பெறுவது .அப்பொழுது கலைஞர் உள்ளதும் போச்சேடா நொள்ள கண்ணா என்று புலம்ப கூடாது.மே 16 க்கு பிறகு கலைஞர் சூர்ய நமஸ்காரம் செய்கிறாரா என்று பார்ப்போம் ?
இப்படிக்கு அப்படி எதுவும் நடக்க கூடாது என வேண்டும் ஒரு திராவிட குஞ்சு.
Monday, May 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
உங்களுக்கு முதல் பின்னுட்டம் நான் போடுகிறேன். இதுக்காகத்தானே என் கடைக்கு வந்து ஏதோ பேசிட்டு இருக்கிங்க :))
//காங்கிரஸ் ஒரு பச்சோந்தி//
கண்டுபிடிச்சிட்டாருய்யா ஐன்ஸ்டீனு. தனி மனித தாக்குதல் பத்தி பேசற மூஞ்சியப் பாரு. எம்ஜிஆர் அமைச்சரைவையில் மந்திரியா இருந்த மாதிரி சொல்றிங்க. எம்ஜிஆர் உயிரோட இருந்தா எப்டி கழட்டி இருப்பாருன்னு.
//எதுவும் நடக்க கூடாது என வேண்டும் ஒரு திராவிட குஞ்சு. //
கொஞ்சம் வளர்ந்தப்புறம் இதெல்லாம் பேசலாம். சரியா?.
//அதற்கு பதில் நீங்கள் தமிழகத்தில் ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்தித்து இருந்தால் உங்கள் மைனாரிட்டி அரசு மெஜாரிட்டி அரசாக மாறி இருக்கும். அந்த சந்தர்ப்பதை இழந்து விட்டார் .//
கருணாநிதி அரசியல் ஆலோசனை சொல்ல ஆள் தேடறாராம். லக்கி கிட்ட சொன்னா சேர்த்துவிடுவார். முயற்சி பண்ணுங்க தம்பி.
thanks kaarki,sanjay
Post a Comment