Friday, May 1, 2009

செல்வேந்திரன் அவர்களுக்கு ஒரு பகிரங்க கடிதம்

அன்புள்ள செல்வேந்திரன் அவர்களுக்கு,

மிக சமீப காலமாக உங்கள் வலைப்பூவில் லக்கிலுக்கைத் தாக்கி எழுதி வருகின்றிர்கள். ஒன்று உங்களுக்கு அவரை பிடிக்காமல் இருக்கும். அல்லது அவரை தாக்கி எழுதினால் நீங்கள் இன்னும் பிரபலம் ஆகலாம் என்ற எண்ணம். கடைசியாக அவர் சொல்வது போல ("ஓராண்டுக்கு முன்னால் நம்மோடு கும்மியடித்துக் கொண்டிருந்தவன் திடீரென இரண்டு புத்தகங்கள் எழுதிவிட்டானே என்ற பொச்சரிப்பும் சிலபேர் என் மீது கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடத்த காரணமாயிருக்கக் கூடும்") இருக்க கூடும்.

கத்தும் கோட்டான்களுக்கும் கரையும் காக்கைகளுக்கும் கூவும் குயில்களுக்கும் படிக்கும் வாசகர்கள்யாகிய எங்களுக்கு தரம் பிரிக்க தெரியும். நீங்கள் அவரை கோட்டான் கோட்டான் என்று கத்தி கரையாதிர்கள். அப்படி தொடர்ந்து செய்து வந்தால் உங்களையும் கோட்டான் என்றே நினைக்க தோன்றும். ( நீ எவ்வாறு உலகத்தை நினைகின்றையோ அவ்வாறே இந்த உலகமும் உன்னை பார்க்கும். )

தனிமனித தாக்குதல் வேண்டாம் என்று சொல்கின்ற நீங்கள் அதை செய்கிறீர்களா ("தாமிராவின் காமிராக் கண்களின் வழியே மட்டுமே என்னைப் பார்த்திருந்த பல நண்பர்கள் 'நேரில் பரதேசியைப் போல இருக்கிறீர்கள்' என்று பகிரங்கமாகச் சொன்னதைக் கேட்டு தற்கொலை முடிவிற்கே வந்தேன் நான். லக்கியைப் பார்த்ததும்தான் மனசு மாறினேன்.")இது மட்டும் தனிமனித தாக்குதல்
இல்லையா ?

இப்படிக்கு
உங்கள் ஊரின் அருகில் இருக்கும் ஊரை சேர்ந்த நண்பன்

அரவிந்த்

4 comments:

வால்பையன் said...

அவுங்க ரெண்டு பேரும் டிகிரி தோஸ்துங்க!
நீங்க இடையில சிக்கி நசிங்கிறாதிங்க!

Sanjai Gandhi said...

மொத்தமே 3 பதிவு தான். அதுல 2வது பதிவே அரசியலா?. எலோருக்குமே சீக்கிறம் பிரபலம் ஆகன்னும்னு ஆசை இருக்கும் தப்பில்லை. முதல்ல அதுக்கான தகுதியை வளர்க்கப் பாருங்க. அப்புறம் சொம்பத் தூக்கிட்டு வாங்க நாட்டாமை வேலைக்கு. அவர்கள் இருவருக்கும் இனியும் விளம்பரம் தேவை இல்லை. இருவரும் ஒரு காலத்தில் நல்ல நண்பர்களாகவும் இருந்தவர்கள் தானாம். அவர்கள் மூத்தப் பதிவர்கள் மற்றும் நல்ல பதிவுகளை எழுதுபவர்கள். இரண்டு பெரிய பதிவர்களுக்கும் நடக்கும் பிரச்சனைக்கு என்ன காரணம் என்பது கூட உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. நீங்கள் எல்லாம் அறிவுரை சொல்லும் அளவுக்கு செல்வா நிலை மோசமாகி விட்டதை நினைத்தால் ரொம்ப கவலையாக இருக்கு. மொதல்ல ஒழுங்க 4 பதிவு எழுதி உங்களுக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்குங்க. அதுக்கப்புறம் நாட்டாமை வேலை எல்லாம் பார்க்கலாம். எதுக்கு வளர்ந்த பதிவர்கள் விஷயத்துல தலையிட்டு சீப் பப்ளிசிட்டி தேடரிங்க?


ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு கமெண்ட் கூட தாண்டலை. ஏப்ரல்ல எழுதின பதிவுக்கு மே மாசம் கமெண்ட் வாங்கிட்டு எதுக்கு இந்த அதிக பிரசங்கித் தனம்?. நீங்க இன்னும் வளரனும் அண்ணே. இப்போவே எல்லாரும் உங்களை ஓரம்கட்ற மாதிரி நடக்காதிங்க.

லக்கிலுக் said...

சஞ்சய் காந்தி அவர்களே!

//இருவரும் ஒரு காலத்தில் நல்ல நண்பர்களாகவும் இருந்தவர்கள் தானாம். //

இப்படி எல்லாம் வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம்

இரும்புத்திரை said...

thanks vaalpaiyan,sanjay,luckylook