Saturday, May 9, 2009

சீமான் ஒரு ! அல்லது ?

சீமான் நீங்கள் காங்கிரஸ் தோற்க வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு வைராக்கியத்தோடு உழைப்பவர். உங்கள் முயற்சியில் காங்கிரஸ் தோற்று போனாலும் அவர்கள் அ.தி.மு.க வெற்றி பெற்றால் அவர்கள் அ.தி.மு.க விடம் கூட்டணி வைக்க தயங்க மாட்டார்கள். அ.தி.மு.க விடம் தேர்தலுக்கு பிறகு கூட்டணி வைப்போம் என்று டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் என்று நேற்று கூறி உள்ளார் .அப்போது தனி ஈழம் என்னவாகும் ?

நீங்கள் காந்தியை இதில் இழுத்து இருக்க வேண்டாம். அவர் நமது தேசத்தின் தந்தையாக மதிக்க படுகிறார் . முதலில் இலங்கையில் நடப்பது நம் நாட்டில் தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் தெரியாது . இங்கு எந்த செய்தியும் படத்தோடு வருவதில்லை அவர்கள் எத்தனை பேர் இலங்கையில் இறந்தார்கள் என்று சின்ன செய்தி வெளி வருகிறது . முதலில் இந்தியர் அனைவருக்கும் இந்தசெய்திகளை படத்தோடு காட்டுவோம் . அந்த தாக்கத்தை முதலில் ஏற்படுத்த வேண்டும் . லண்டனில் பாராளுமன்றத்தில் உண்ணாவிரதம் இருந்த இரு ஈழத் தமிழர்கள் போல நீங்கள் நம் பாராளுமன்றத்தில் உண்ணாவிரதம் இருக்க
தயாரா ? சேர்ந்து இருக்க நங்கள் தயார் .

தனி ஈழம் அமைப்போம் என்று கூறிய அ.தி.மு.க ஏன் 2001-2006 ஆட்சியின் போது கூறவில்லை. 2005 லில் தான் ராஜபக்சே ஆட்சிக்கு வந்தார் அப்பொழுது தமிழகத்தை ஆண்டது அ.தி.மு.க மெஜாரிட்டி அரசு தானே ஏன் சொல்லவில்லை?அவர்களுக்கு நீங்கள் ஒட்டு வாங்கி தர முடிவு செய்து உள்ளிர்கள் . இப்பொழுது மக்களை சந்திக்க விமானத்தில் வந்தவர் ஏன் தமிழக மீனவர்கள் இறந்த பொழுது வரவில்லை அப்பொழுது விமானம் வேலை செய்யவில்லையா அல்லது கண்டுப்பிடிக்க படவில்லையா ? எனக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் விமானத்தில் வந்தேன் என்று கூறியவர் தீவிரவாதிகள் என்று கூறியது யாரை பார்த்து (விடுதலை புலிகளா ??). நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள் .

நீங்கள் உங்கள் குரலை உயர்த்த சரியான இடம் நம் பாராளுமன்றம் தான் .ஒரு மேலவை எம்.பி யாக மாறுங்கள். உங்கள் பேச்சால் ஓட்டு வாங்க துடிக்கும் அ.தி.மு.க அல்லது பா.ம.க விடம் மேலவை எம்.பி யாக ஒரு இடம் கேளுங்கள் .அல்லது ஈழ பிரச்சனையை வைத்து ஒரு படத்தை எடுத்து இந்தியா முழுவதும் திரை இடுங்கள் . ஈரான் படத்தை புரிந்து கொள்ளும் இந்தியன் உங்கள் படத்தையும் புரிந்து கொள்வார்.

சேவின் உருவப்படம் பொறித்த அடைகளை அணியும் நீங்கள் எதாவது செய்தால் உங்கள் உருவப்படம் பொறித்த அடைகளை அணிய ஒரு கூட்டம் உருவாகும் . 2001-2006 ஆட்சியின் பொழுது நீங்கள் இது போல பேசி இருந்தால் நீங்கள் வைகோ போல தொடர்ந்து சிறையில் இருந்து இருப்பிர்கள்.
நீங்கள் இதுவரை எங்களுக்கு ஒரு ! . தொடர்ந்து காந்தி, கோட்சே என்று பேசி வந்தால் ? யாக மாறி விடுவிர்கள் .

Friday, May 8, 2009

ஒரு தீவின் கதை

ஒரு தீவில் பிரபு என்ற ஒரு மக்களின் தலைவர் இருந்தார் . ஆனால் அதே தீவை சேர்ந்த பலருக்கு அவர் என்றல் ரொம்பவே பயம் முக்கியமாக இருவருக்கு அவர்கள் (ச.பொன்னப்பா மட்டும் ம.ராஜப்பா) ரொம்ப ரொம்ப பயம் மட்டும் இல்லாது அவரை பிடிக்கவே பிடிக்காது .

ஆனால் வாய் பேச்சில் வல்லவர்கள் .

இருவரும் ஒருநாள் சாப்பிட்ட உணவே செரிக்காததால் காட்டு பக்கம் ஒதுங்கி இருக்கிறார்கள் .

அப்போது அந்த பக்கம் பிரபு வந்தவுடன் பதறி போய் ஒரு புதரில் ஒளிந்து கொண்டார்கள் .

பிரபு சென்ற பிறகு

ச.பொன்னப்பா : நீங்க ரொம்ப பயந்துட்டிங்க தானே

ம.ராஜப்பா : இல்லவே இல்லை

ச.பொன்னப்பா : சும்மா சொல்லுங்க பயந்துட்டிங்க தானே

ம.ராஜப்பா : இல்லை நான் பயப்படவே இல்லை

ச.பொன்னப்பா : யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன் என்னக்கு தெரியும் நீங்க
பயந்துட்டிங்க

ம.ராஜப்பா : ஆமா நீ எப்படி கண்டு பிடிச்ச ??

ச.பொன்னப்பா : பயத்துல நீங்க எனக்கு கழுவிட்டிங்க

ம.ராஜப்பா : பிரபுவை பிடிக்க நான் உனக்கு மட்டும் இல்ல நான் எல்லார் *த்தையும் கழுவி விடுவேன் .

ச.பொன்னப்பா : (மனதுக்குள்)
நீ எவன் *த்தை கழுவி தண்ணி குடித்தாலும் ஒன்றுமே செய்ய முடியாது

பின் குறிப்பு :
பாண்டிய மணிமகுடத்தை சோழர்கள் ஒரு தீவில் ஒளித்து வைத்து இருந்தார்கள்
அது போல இன்றும் நமக்கு தரும் வாக்கு உறுதிகளை ஒரே தீவின் தலை எழுத்தையே மாற்றி விட போவதாக எண்ணி நாம் ஏமாந்து விட கூடாது .
வாக்கு உறுதிகள் மே 13 வரை தான்.

எங்களை மன்னித்து விடுங்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை
என்று சொல்லும் பொழுது அங்கு யாரும் இருக்க மாட்டார்கள் .
ஏற்க படாத மன்னிப்பு மரணத்தை விட கொடுமையானது .
தனி ஈழம் வேண்டாம் வரும் அகதிகளுக்கு ஒரு தனி கிராமம் அமைப்போம் .
இங்கே நிறைய இடம் உள்ளது நம் மனதில் தான் இடம் இல்லை .

Thursday, May 7, 2009

விராக்குளத்து கதைகள் - 1

(என் சொந்த ஊர் இது என்னுடைய தந்தை எனக்கு கூறிய கதை)
அவன் அந்த ஊரிலே பெரிய பொய்யன். பொய் சொல்வதில் அவன் அவனை அடித்து கொள்ள வேறு ஆளே கிடையாது. அவன் மகன் பொய்யே சொல்வதில்லை என்ற குறை அவனுக்கு உண்டு. (அப்பாவின் பழக்கங்கள் மகனும் மகனுக்கு மிகவும் பிடிக்கும் அல்லது பிடிக்கவே பிடிக்காது).
ஓருநாள் ஊரார் மத்தியில் ஏதோ பொய் சொல்ல பையனும் அங்கே வர ,பையனிடம் கேட்ட பொழுது அவன் உண்மையை சொல்லி விட்டான். ஊரே கை கொட்டி சிரித்து விட அந்த கோபத்தில் ஊருக்கு வெளியே உள்ள கிணத்தில் மகனை தள்ளி விட்டு வந்து விட்டான். அது ஒரு பாழும் கிணறு ஏற வழியே கிடையாது .
வீட்டுக்கு வந்து பார்த்தால் மகன் உள்ளே சொட்ட சொட்ட நனைந்து வாசலில் இருக்கிறான். எப்படி வந்தே என்று கேட்கிறான் மகனிடம்
அப்பா நீங்க போன பிறகு ஒருத்தன் வந்து ஒண்ணுக்கு போனான் . அதை பிடித்து மேலேறி வந்து விட்டேன் .
நீதி 1 : சில இரகசியங்களை உங்கள் வாரிசுகளிடன் மட்டும் சொல்லுங்கள் .உங்கள் குழந்தைகளின் ஆதர்ச நாயகன் நீங்கள் தான்.நல்ல பழக்கங்களைக் கற்று கொடுங்கள் . உங்கள் ஆசையை திணிக்காதிர்கள்மிக மோசமாக கெட்டு போவார்கள்
குழந்தைகளின் உலகத்தை அருகில் இருந்து பாருங்கள் பேசுங்கள் பேச விட்டு நிறைய கேளுங்கள் .
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் , அவர்களின் மனச்சிதைவுகளையும் நாம் பேசினாலே தடுக்க முடியும்.
குழந்தைகளிடம் பேச நேரம் இல்லாதவர்கள் இங்கு செல்லவும்
இடம் : கிழக்குப் பதிப்பகம் மொட்டைமாடி,எல்டாம்ஸ் ரோடு,சென்னை.
நாள் : 10/மே/2009.
நேரம் : மாலை 4:30 - 7.00.
இங்கு சென்று அவசியத்தை தெரிந்து கொள்ளவும்
பின் குறிப்பு :
என் பதிவில் நிறைய எழுத்து பிழைகள் உள்ளது .அதற்கு காரணம் நான் பதிவிடும் கணினியில் யூனிகோட் பிரச்சனை உள்ளது என்னால் பதிவிடும் பொழுது கவனிக்க முடியவில்லை .ஹிட்லருக்கு பயந்து டைரி எழுதும் நாஜிக்கள் போல என் நிலைமை கவலைக் கிடமாக இருக்கிறது .இங்கே யாருக்கும் தமிழர்களை கண்டால் பிடிக்காது என்னை பற்றி சொல்லவே வேண்டாம் என்னை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும் என் பக்கம் இருக்கும் பிழைகளை திருத்தி கொள்ள சில காலம் பிடிக்கும்

Wednesday, May 6, 2009

தனி ஈழம் தொடர்பாக வைகோ,விஜயகாந்துடன் ஒரு சந்திப்பு

முதலில் வைகோ ஆழ்ந்த யோசனையில் இருக்கிறார்

அரவிந்த் : என்ன பாஸ் ரொம்ப சோகமா இருக்கீங்க ?

வைகோ : தனி ஈழம் அமைக்க இலங்கை சென்று இடம் பார்க்க சொல்லி இருக்கிறார்.அம்மா நானும் தம்பி சம்பத்தும் ஒரு படையோடு போறோம்.

அரவிந்த் : போயிட்டு வர்றோம்ன்னு சொல்லுங்க

வைகோ : நான் வேற தேவை இல்லாம சரத் பொன்சேகாவை கலாய்த்து விட்டேன் .இனிமேல் எங்கே வர முடியும் . கலைஞர் எங்கள் கட்சியை தான் உடைத்தார்.அம்மாவோ எங்களை இல்லாமல் செய்து விடுவார் என நினைக்கிறேன்.

அரவிந்த் : சும்மாவே இரண்டு பெரும் வயலே வெடி வெடித்து வானவேடிக்கை காட்டுவிங்க.

ஆனால் உங்களுக்கு தனி ஈழம் கொண்டான் என்ற பட்டம் நிச்சயம் உண்டு . வெற்றி பெற வாழ்த்துக்கள் .

வைகோ : கிடைக்கலைனா ?

அரவிந்த் : வந்தா மலை போனா ம..

வைகோ : என்ன தம்பி அசிங்கமா பேசுற

அரவிந்த் : இல்ல பாஸ்ஸு ம.தி.மு.க கட்சின்னு சொல்ல வந்தேன்

வைகோ : உன்ன பத்தி எனக்கு தெரியாதா என்ன சரி மறுபடியும் கேட்கிறேன்
கிடைக்கலைனா ?

அரவிந்த் : அப்ப அடுத்த செட்டு ராமதாஸ், காடுவெட்டி குரு தலைமையில் வரும் .
வைகோ : அப்ப சரி.

அரவிந்த் : என்னா வில்லத்தனம் என்ன திரும்பவும் யோசனை ?

வைகோ : தாய் கழகத்தில் சேரலாம்ன்னு நினைக்கிறேன்

அரவிந்த் : தனியா போனா கலைஞர் உங்களை சேர்த்துப்பாரா ?

வைகோ : நீ முதல்ல வெளிய போ. பயபுள்ள ரொம்ப அழகா நோட்டம் விடுறான்.

******************************************************************************************************************************
விஜயகாந்த் வைகோ விஷயம் கேள்விப்பட்டு தனி விமானத்தில் இலங்கை செல்கிறார் செல்வதற்கு முன் சென்னையில் சிங்கள பத்திரிகையாளர்களுடன் ஒரு சந்திப்பு கூடவே மொழி பெயர்க்க அரவிந்த்

சிங்கள பத்திரிகையாளர்கள் முன்பு

விஜயகாந்த் : ஏய் நீங்க கடத்திகிட்டு வந்த எங்கள் மீனவர்களின் படகு மொத்தம் முப்பது அதுல பத்து நல்ல படகு மிச்சம் கொஞ்சம் உடைஞ்ச படகு
அரவிந்த் : கேப்டன் புள்ளி விவரத்தை நிறுத்துங்க அவங்க நீங்க ப்ளைன்ல சாப்பிட்ட போர கணக்குனு நினைகிறாங்க

சிங்கள பத்திரிகையாளர்கள் : ஏன் இவர் மட்டும் தனியா வர்றாரு ?

அரவிந்த் : அவர் தான் தமிழ்நாட்டின் கேப்டன்

சிங்கள பத்திரிகையாளர்கள் : ரஞ்சி டீம்லையா ?


விஜயகாந்த் : காஷ்மீர் - கன்னியாகுமரி வரைக்கும் நான்

அரவிந்த் : போதும் அவங்க தமிழ் படம் பார்த்தது இல்லையாம்

விஜயகாந்த் : சீக்கிரம் நான் சொன்னதை சிங்களத்தில் சொல்

அரவிந்த் : !@$^*)(*&^%#@~!@#$%^*()*&^%$!@$^*)(*&^%#@~!@#$%^*()*&^%$!@$^*)(*&^%#@~!@#$%^*()*&^%$

விஜயகாந்த் : என்ன சொன்ன ?

அரவிந்த் : தனி ஈழம் தர மறுத்தால் இலங்கை மீது போர் தொடுத்து ராஜபக்சேவையும்,பொன்சேகாவையும் கைது செய்து ஐ.நா வில் ஒப்பைடைப்போம் என்று சொன்னேன் .

விஜயகாந்த் : இத நான் சொல்வே இல்லையே

அரவிந்த் : இல்ல சொல்விங்கன்னு நினைச்சு நானே நங்கூரத்தை நல்லா நச்சினு போட்டுட்டேன்

விஜயகாந்த் : இப்ப தப்பிக்க எதாவது வழி சொல்

அரவிந்த் : இது எங்கள் ஆசான் பட விளம்பரம்ன்னு சொல்லுங்க

விஜயகாந்த் : ஆமா அந்த படத்தில் நாங்கள் இந்த பிரச்சனையை தொட்டு இருக்கிறோம்

அரவிந்த் : நீங்க அந்த படத்துல வங்கில வேலை செய்றிங்க அப்புறம் எப்படி ஈழ பிரச்சனை

விஜயகாந்த் : வங்கி பணத்தை எடுத்து தனி ஈழம் அமைக்கிறோம் டேய் கொஞ்ச நேரம் வாய மூடு

அரவிந்த் : அப்ப விக்ராந்த் ?

விஜயகாந்த் : அவன் தான்டா பணத்தை பட்டுவாடா பண்றான்
உனக்கு ஆனந்த விகடன் லூசுப்பையனே தேவைல்ல வா போவோம்
பயணம் ரத்து செய்யப்படுகிறது

Tuesday, May 5, 2009

வடகம்,கூழ்வத்தல்

அவியல் , குவியல் , மற்றும் காக்டையில் வரிசையில் ஒரு சிறு முயற்சி .
இந்த பதிவை எழுதும் பொழுது நான் படித்த சினிமா செய்தி ஞாபகம் வந்தது.
இயக்குனர் ஸெல்வன் ஹீரோவாக அறிமுகமாகும் படம், மாக்கான். முட்டாள் முரடனுக்கு ஊர் பக்கம் சொல்லும் செல்லப் பெயர் மாக்கான். படத்தின் சப் டைட்டிலில் ஷாருக்கான், சல்மான்கா‌ன், அமீர்கான் வ‌ரிசையில் மாக்கான் என்று போடுகிறார்கள்.

அப்ப இந்த பதிவில்

ஷாருக்கான் - வால் பையன் ( காரணம் எனக்கு கூட பின்னுட்டம் இட்டு தொடர்ந்து எழுத சொல்கிறார் )

சல்மான்கா‌ன் - வேற யார் நம்ம கார்கி தான் ( நான் என் கருத்தை சொன்னால் பின்னுட்டம் இட்டு இதற்கு தானே அலைந்தாய் என்று என் மூஞ்சை உடைக்கிறார். நான் பின்னுட்டம் தேடி அலைபவன் இல்லை )

அமீர்கான் - சத்தியமா பரிசல் தான் ( அவியல் மற்றும் காக்டையில் மாற்றி விட்டு படித்தவரை பார்த்து தொப்பி தொப்பி என்று வித்தியாசம் காட்டினார்)

அப்ப மாக்கான் - இன்னும் புரிஞ்சிகலையா ஐயோ ஐயோ பாவம் இன்னும் பச்ச பிள்ளை மாதிரி பாக்காதிங்க அது அரவிந்த்(சாட்சாத் நான் தான்)
மேலே கூறிய ஷாருக்கான், சல்மான்கா‌ன், அமீர்கான்களை நான் தினமும் படித்து வருகிறேன்.

******************************************************************************************
ஏப்ரல் மாதத்தில் பதிவு எழுத துவங்கினால் அரசியல் பத்தி எழுத கூடாதா
// ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு கமெண்ட் கூட தாண்டலை. ஏப்ரல்ல எழுதின பதிவுக்கு மே மாசம் கமெண்ட் வாங்கிட்டு எதுக்கு இந்த அதிக பிரசங்கித் தனம்?. //
ஏப்ரல் மாதத்தில் எழுதிய பதிவிற்கு மே மாதத்தில் கமெண்ட் போட்டால் அதற்கு நான் என்ன செய்ய முடியும் .அது கூட ஒரு திறமை தான் .
இதுவே தவறு ஒரு பதிவில் இரண்டு கமெண்ட் (உங்கள் கமெண்ட் உட்பட அப்போ நான் இப்ப சொம்பத் தூக்கிட்டு வரலாமா அரசியல் பத்தி எழுதலாமா ?)
இது கூட ஒரு அரசியல் பாணியில் உள்ள ஒரு தாக்குதல் தான் திரு சஞ்சய் என்ற பொடியன் அண்ணனே .
அப்ப உங்கள் கருத்துப்படி பார்த்தால் லக்கிலுக்கும் , செல்வேந்திரன் மற்றும் தான் அரசியல் பத்தி எழுத வேண்டும் .( மூன்று பதிவிற்கு மேல் மட்டும் நிறைய கமெண்ட் வாங்குறாங்க )
புதிதாக எழுத வருபர்களை "இப்போவே எல்லாரும் உங்களை ஓரம்கட்ற மாதிரி நடக்காதிங்க." இப்படி எல்லாம் பூச்சு காட்டதிங்க பொடியன் அண்ணனே .
//தனி மனித தாக்குதல் பத்தி பேசற மூஞ்சியப் பாரு. // என்னோட மூஞ்சியப் எப்போ அண்ணா உங்க கிட்ட காட்டினேன்
//கருணாநிதி அரசியல் ஆலோசனை சொல்ல ஆள் தேடறாராம். லக்கி கிட்ட சொன்னா சேர்த்துவிடுவார். முயற்சி பண்ணுங்க தம்பி.//
கண்டிப்பா அவர்கிட்ட சேர்த்து கொள்வேன் நீங்கள் சிபாரிசு பண்ண வேண்டாம்
உங்கள் அறியுரைக்கு நன்றி இனிமேல் நான் அரசியல் பற்றி எழுத போவதில்லை இப்போ நீங்கள் என்னை சேர்த்து குவிங்களா ??
அடுத்த பதிவில் நான் ஈழ தமிழர்களைப் பற்றி எழுதினால் திரு பொடியன் அண்ணன் அவர்கள் என் சட்டையை பிடித்து இதெல்லாம் மூத்த பதிவர்களின் வேலை இதை எழுத எனக்கு தகுதி இல்லை என்று அடித்து விடுவார்.
அரசியல் பற்றி என்ன தகுதி இருக்கிறதோ அதே தகுதி ஈழ தமிழர்களைப் பற்றி எழுதவும் இருக்கிறது காரணம் மடிப்பாக்கத்தில் நான் அவர்களுடன் வாழ்ந்து உணவு அருந்தி அவர்கள் வீட்டிலேயே ஒரு பிள்ளை போல உறவாடி இருக்கிறேன் .
அதே தகுதி உடன் தான் செல்வேந்திரன் வலைப்பூவை முழுதாக படித்து விட்டு எழுதி இருக்கிறேன் ஒரு தி.மு.க கட்சியை ஆதரிக்கும் ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இருக்கிறேன் கலைஞரை பற்றி எழுதினேன் எழுதுவேன் .
******************************************************************************************
தினமும் படிக்கும் மற்ற பதிவர்கள் மற்றும் எழுத்தாளர்கள்
சாரு,லக்கி லுக், அதிஷா , நரசிம், தாமிரா , குசும்பன் , உண்மை தமிழன், வெட்டிபயல் ,மாதவராஜ், ராமகிருஷ்ணன், வடகரை வேலன் ,வித்யா, செல்வேந்திரன்,CableSankar ,ச்சின்னப் பையன் , முரளி கண்ணன் ,அபி அப்பா , அனுஜன்யா ,ஜ்யோவ்ராம்சுந்தர் ,bleaching powder, ponniyin selvan -mkp ,pihai pathiram,dr.bruno இன்னும் பலர் . விடுபட்டு இருந்தால் என்னை மன்னித்து கொள்ளவும் .
லக்கி லுக் - இவரை பார்த்தே நான் எழுத நினைத்தேன் .(என் குரு)
அதிஷா , நரசிம் - எழுதி இவர்களிடம் அசிங்க பட்டு விடுவேனோ என்று பயந்தேன் .
கார்கி,வித்யா - படித்து விட்டு எழுத தொடக்கி விட்டேன் எளிமையான எழுத்து.
முதல் பின்னுட்டம் இட்டு நான் காயப்படுத்தியது - கார்கி
முதல் பின்னுட்டம் இட்டு என்னை காயப்படுத்தியது - கார்கி
முதல் பின்னுட்டம் இட்டு என்னை உற்சாகப்படுத்தியது - தீப்பெட்டி .
முதல் பின்னுட்டம் இட்டு என்னை உஷார்படுத்தியது - வால் பையன்
***********************************************************************************************************************
இன்னைக்கு ஒரு சாம்பிள் பலான ஜோக்
இரண்டாவது படிக்கும் படிக்கும் ஒரு பையன் அறிவியல் ஆசிரியை அருகில் அழைத்து "டீச்சர் ஒரு ஏழு வயது பையனும் ஒரு ஏழு வயது பெண்ணும் செக்ஸ் வைத்து கொண்டால் குழந்தை பிறக்குமா" என்று கேட்டான்.
ஆசிரியை பிறக்க வாய்ப்பே இல்லை என்று கூறினார்
உடனே பக்கத்தில் இருக்கும் பெண்ணிடம் திரும்பி அதான் ஒன்றும் ஆகாது என்று சொன்நேனே வருத்தபடாதே என்றான் .
இப்ப சொல்லுங்க பாலியல் கல்வி தேவையா என்று
முதல்ல உங்க வீட்டில் இருக்கும் தொல்லைகாட்சியை அணைத்து தினம் உங்கள் குழந்தையோடு பேசுங்கள் .

Monday, May 4, 2009

கலைஞர் ஒரு ராஜ தந்திரியா ????

தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பாவது கலைஞர் தி.மு.க எம்.பிகளை ராஜினாமா செய்ய சொல்லி இருந்தால் இந்த தேர்தலில் கூட தி.மு.க எம்.பிகள் மகத்தான வெற்றியை பெற்று இருப்பார்கள் . காங்கிரஸ் தி.மு.க ஆட்சியை தமிழகத்தில் கவிழ்த்து விடும் என்று பயந்து அவர்களுடன் கலைஞர் ஒன்றும் செய்யாமல் இருந்து விட்டார்.

எம்.பிகள் ராஜினாமா செய்ய போவதாக சொல்லி மக்களிடம் ஒரு புன்சிரிப்பை ஏற்படுத்தி இருந்தார். ஆனால் கடைசியில் அது பெரும் சிரிப்பாய் ஊர் சிரித்தது .கடை அடைப்பு மற்றும் உண்ணாவிரதம் வெற்றி பெற்றதாக நினது கொண்டு இருக்கிறார். அதற்கு பதில் நீங்கள் தமிழகத்தில் ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்தித்து இருந்தால் உங்கள் மைனாரிட்டி அரசு மெஜாரிட்டி அரசாக மாறி இருக்கும். அந்த சந்தர்ப்பதை இழந்து விட்டார் . இந்த முறை உங்களுக்கு விழ வேண்டிய பல ஓட்டுக்கள் திடீர் தமிழீழத்தாய்க்கு மாறி விழ கூடிய சூழலை ஏற்படுத்தி விட்டார் கலைஞர்.

இப்பொழுது எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்து அவரது ஆட்சி மைனாரிட்டி அரசாகஇருந்தால் அவர் ஆட்சியை கலைக்க தயங்கி இருக்க மாட்டார். அதனால் தான் அவர் ஆட்சியில் இருந்த காலத்தில் கலைஞர் எதிர் வரிசையிலே அமர்ந்து இருந்தார்.

காங்கிரஸ் ஒரு பச்சோந்தி .அவர்கள் தேர்தலில் போதுமான எம்.பிகள் வேண்டும் என்றால் அதிமுகவிடம் கூட்டணி வைக்க தயங்க மாட்டார்கள். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அதிமுக வைக்கும் ஒரே வேண்டுகோள் தமிழகத்தில் வாபஸ் பெறுவது .அப்பொழுது கலைஞர் உள்ளதும் போச்சேடா நொள்ள கண்ணா என்று புலம்ப கூடாது.மே 16 க்கு பிறகு கலைஞர் சூர்ய நமஸ்காரம் செய்கிறாரா என்று பார்ப்போம் ?

இப்படிக்கு அப்படி எதுவும் நடக்க கூடாது என வேண்டும் ஒரு திராவிட குஞ்சு.

Friday, May 1, 2009

செல்வேந்திரன் அவர்களுக்கு ஒரு பகிரங்க கடிதம்

அன்புள்ள செல்வேந்திரன் அவர்களுக்கு,

மிக சமீப காலமாக உங்கள் வலைப்பூவில் லக்கிலுக்கைத் தாக்கி எழுதி வருகின்றிர்கள். ஒன்று உங்களுக்கு அவரை பிடிக்காமல் இருக்கும். அல்லது அவரை தாக்கி எழுதினால் நீங்கள் இன்னும் பிரபலம் ஆகலாம் என்ற எண்ணம். கடைசியாக அவர் சொல்வது போல ("ஓராண்டுக்கு முன்னால் நம்மோடு கும்மியடித்துக் கொண்டிருந்தவன் திடீரென இரண்டு புத்தகங்கள் எழுதிவிட்டானே என்ற பொச்சரிப்பும் சிலபேர் என் மீது கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடத்த காரணமாயிருக்கக் கூடும்") இருக்க கூடும்.

கத்தும் கோட்டான்களுக்கும் கரையும் காக்கைகளுக்கும் கூவும் குயில்களுக்கும் படிக்கும் வாசகர்கள்யாகிய எங்களுக்கு தரம் பிரிக்க தெரியும். நீங்கள் அவரை கோட்டான் கோட்டான் என்று கத்தி கரையாதிர்கள். அப்படி தொடர்ந்து செய்து வந்தால் உங்களையும் கோட்டான் என்றே நினைக்க தோன்றும். ( நீ எவ்வாறு உலகத்தை நினைகின்றையோ அவ்வாறே இந்த உலகமும் உன்னை பார்க்கும். )

தனிமனித தாக்குதல் வேண்டாம் என்று சொல்கின்ற நீங்கள் அதை செய்கிறீர்களா ("தாமிராவின் காமிராக் கண்களின் வழியே மட்டுமே என்னைப் பார்த்திருந்த பல நண்பர்கள் 'நேரில் பரதேசியைப் போல இருக்கிறீர்கள்' என்று பகிரங்கமாகச் சொன்னதைக் கேட்டு தற்கொலை முடிவிற்கே வந்தேன் நான். லக்கியைப் பார்த்ததும்தான் மனசு மாறினேன்.")இது மட்டும் தனிமனித தாக்குதல்
இல்லையா ?

இப்படிக்கு
உங்கள் ஊரின் அருகில் இருக்கும் ஊரை சேர்ந்த நண்பன்

அரவிந்த்