Wednesday, September 1, 2010

வினவின் இணையப்புரட்சி வெத்து வேட்டாக வெடித்தே விட்டது

அலாஸ்காவில் இருந்து இரும்புத்திரையை மட்டும் இணையத்தில் படிப்பவர்கள் எதிர்வினை எழுதுவது தான் வேலை என்று  யாராவது கூகுள் பஸ்,டிவிட்டர்,ஃபோரம்,ப்ளாக் போன்ற எதிலாவது எழுதி விட்டால் உடனே பிரபல பஸ்ஸர் யாராவது லைக்குவார்கள்.பிரபல பஸ்ஸர் என்று சொன்னது பகடியாக இருந்தாலும் வஞ்சப்புகழ்ச்சியாக இருந்தாலும் அதை உண்மை என்று எடுத்து கொள்ள வேண்டும்.சிரித்து விடக்கூடாது.

முதலில் ஒரு ஜூலை மாதம் இன்னொரு பிரபலத்துக்கு பெருங்காயம் ஏற்படுத்தினாலும் அட சொல்லும் கருத்தில் உண்மை இருக்கிறதே லேசாக ஆதரவு குரல் கொடுத்து தொலைத்தது தான் வினையாகி போய் விட்டது. தேவையாடா உனக்கு இது. லேசாக காலை தட்டி விட்டதற்கே பிரபலத்துக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.குழிக்குள் விழுந்திருந்தால் மண்ணைப் போட்ட வரும் கூட்டத்தை நினைத்ததும் மனசு மகிழ்ச்சியில் பொங்கி விட்டது.

புரட்சியை எல்லாம் பார்த்தால் அவர்கள் தான் பெரியவர்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.காரணம் அவர்கள் வீச்சு அப்படி.அவர்களை யாராவது எதிர்த்து கருத்து சொன்னாலே போது தோழர்கள் டிவிட்டர், பஸ், ப்ளாக் என்று பாய்ந்து வருவார்கள். வழக்கம் போல அடுத்தவர் இடம் என்றால் அடியை வாங்கி கொண்டு போவார்கள்.அவர்கள் இடமாகயிருந்தாலும் தைரியமாக வருவார்களா என்றால் அதுவும் கிடையாது.முக்கால்வாசி மூடிக் கொண்டு தான் வருவார்கள்.வந்து இவர்களுடைய அல்லக்கை பட்டத்தை கோவி.கண்ணன்,பாலபாரதி (எவ்வளவு உனக்கு பட்டாலும் புத்தி வராது.இப்படி ஆதரவு கொடு உனக்கு அவங்க ஷேர் கொடுப்பாங்க என்று மனசாட்சி திட்டினாலும்) போன்றவர்களுக்கு கொடுத்து அவர்களுடைய பச்சோந்தி பட்டத்தையும் கொடுத்து விடுவார்கள்.எப்படி வேணாலும் இருங்கள். அவர்களுடன் சேர்ந்து விட்டால் யாரோ தப்பாக சொன்னார்கள்.அப்போது புரிதல் இல்லை இப்படி ஏதாவது சொல்லி சேர்த்து கொள்வார்கள். நானும் புரிதல் இல்லாமல் எழுதியதாக நினைத்து கொள்ளுங்கள்.

இணையத்தில் இவர்கள் ஒரே ஆள் வெவ்வேறு ஐடியில் வருகிறார்கள் என்று மார்க்ஸ் சொன்னதற்கு பொங்கினால் எப்படி. அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். தோழர் ஏழரையைத் தவிர யாரும் வினவைத் தாண்டி வர மாட்டார்கள். ஆனால் விண்ணைத் தாண்டி வருவாயா விமர்சனத்திற்கு மட்டும் எல்லாருடைய ப்ளாக்கிலும் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்து எங்கு விமர்சனம் செய்ய மட்டும் செய்ய தெரியும்.விதவிதமான பெயர்களில்.அப்புறம் மார்க்ஸ் ஏன் சொல்ல மாட்டார்.

ராஜீவ் கொலை நடந்த சமயம் தி.மு.கவை இவர்கள் தான் காப்பாற்றினார்கள். அப்புறம் கலைஞர் சட்டசபை தேர்தலில் ஜெயிக்க இவர்கள் நடத்திய பிரச்சாரம் தான் காரணம்.அதற்கு கைமாறாகத்தான் முதல்வர் இவர்கள் என்ன திட்டினாலும் கைது செய்யவேயில்லையாம்.சவுக்கு அளவிற்கு பிரபலம் இல்லை என்பது தான் உண்மை.

//எழுத விரும்பினாலும் ம.க.இ.க கும்பலின் பதிலடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற அச்சத்தின் காரணமாக எழுதுவதில்ல என்றால், தமிழ்ப் பதிவுலகில் அப்படியொரு தார்மீக அச்சத்தைத் தோற்றுவித்திருக்கும் எமது தோழர்கள் பலரின் பணி குறித்து பெருமைப்படுகிறோம்.//

இதை விட காமெடி கிடையவே கிடையாது.ஆமாம் வீட்டுக்கு ஆள் அனுப்புவோம் என்று சொன்னவர்கள் தானே இவர்கள். இணையத்தில் எதிர்கருத்து வந்தாலே பொறுக்க முடியாது. ஒரு பஸ்ஸிற்கு இத்தனை பொங்கினால் இவர்கள் கையில் அதிகாரம் இருந்தால் எப்படி இருக்கும்.

ஆனால் இவர்கள் கையில் அதிகாரம் முழுமையாக இருந்தால் தோழர்களாலே ப்ளாக் எழுத முடியாது.இருந்தால் தானே எழுத.மேலும் கருணானிதியின் தலையை எடுப்போம் என்று சொன்னதற்கு திமுக தொண்டர்கள் ஆவேசப்படவில்லையாம். அப்படி எதுவும் நடக்காது என்று தெரியும்.ஏன் ஆவேசப்பட வேண்டும்.காமெடி பண்ணுங்க ஒரு அளவா பண்ணுங்க.

வினவு பதிவுககில் பிரபலம் என்பது உண்மை தான்.ம.க.இ.க கட்சி என்று ஒன்று இருப்பதே எனக்கு இன்று தான் தெரியும்.தேர்தல் ஆணையத்திற்கு என்று தெரிந்து அந்த கட்சியின் அந்தஸ்தைப் பிடுங்கி அதற்கு அங்கீகாரம் தருவார்களோ அன்று ஒத்துக் கொள்கிறேன் ம.க.இ.க கட்சி தான் பெரிய கட்சி என்று.மிளகாய் தான் பெரிசு என்றும் ஒத்துக் கொள்கிறேன்.

13 comments:

இரும்புத்திரை said...

வாழ்க்கை ஒரு சீசா எதிரில் இருப்பவர் எழுந்து போய் விட்டால் பல் போய் விடும்.

கலகலப்ரியா said...

||//எழுத விரும்பினாலும் ம.க.இ.க கும்பலின் பதிலடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற அச்சத்தின் காரணமாக எழுதுவதில்ல என்றால், தமிழ்ப் பதிவுலகில் அப்படியொரு தார்மீக அச்சத்தைத் தோற்றுவித்திருக்கும் எமது தோழர்கள் பலரின் பணி குறித்து பெருமைப்படுகிறோம்.//||

என்ன கொடுமை சரவணா... (எனக்கு உதறுது...)

vasu balaji said...

சில விஷயங்கள் புரியவில்லை. ஏதாவது அரசியல் கட்சியைச் சார்ந்தால்தான் ஓட்டளிக்க முடியுமா என்ன? இருக்கிற திருடனில் சுமார் திருடன் யார் என்று அளிக்க முடியாதா. எல்லாப் பதிவர்களும் தங்கள் அரசியல் சார்பை எழுதினால் வாசகர்கள் அல்லது சக பதிவர்கள் அதே சார்புடன் இருக்க வேண்டும் அல்லவா? அப்படியானால் திரும்பவும் குழு பிரச்சினை வருமே. நடுநிலை என்ற ஒன்றே கேலிக்குறியதாகி விடுகிறது இவர்கள் வாதத்தில். ஒன்று எதிர்க்க வேண்டும். அல்லது ஆதரிக்க வேண்டும்தானா. கருத்து இல்லை அல்லது தெரிவிக்க விரும்பவில்லை என்ற நிலை எடுப்பது தவறா என்ன?

இப்படிக்கு மொக்கை+எதிரெதிர்கவுஜைக்கு எதிர்கவுஜை பதிவர்:))

அது சரி(18185106603874041862) said...

//
எவ்வளவு உனக்கு பட்டாலும் புத்தி வராது.இப்படி ஆதரவு கொடு உனக்கு அவங்க ஷேர் கொடுப்பாங்க என்று மனசாட்சி திட்டினாலும்
//

ஷேர் கொடுத்தா வாங்கிக்க மேன். எதுக்கு பொலம்புற? இரும்புக்கடையை இன்னும் விரிவுபடுத்தலாம். இன்னும் ரெண்டு பேரை வேலைக்கு வைக்கலாம். விவரம் தெரியாத ஆளா இருக்கீரே?

அது சரி(18185106603874041862) said...

//
இரும்புத்திரை said...
வாழ்க்கை ஒரு சீசா எதிரில் இருப்பவர் எழுந்து போய் விட்டால் பல் போய் விடும்.
//

இது எனக்கு பிடிச்சிருக்கு. அதனால நான் தான் முதல்ல எழுந்து போவேன்.

அது சரி(18185106603874041862) said...

//
ராஜீவ் கொலை நடந்த சமயம் தி.மு.கவை இவர்கள் தான் காப்பாற்றினார்கள்.
//

இது கருணாநிதிக்கோ ராஜீவுக்கோ தெரியுமா?

ராஜவம்சம் said...

வீட்டு வாசல்ல பாருங்க ஆட்டோ வர்ரசத்தம் கேட்குது.

Renga said...

வினவு (time waste parties) மற்றும் communist களால் சமுதாயத்தில் சிறு மாற்றத்தை கூட ஏற்படுத்த முடியாது என்பதை முற்றிலும் அவர்களே உணர்ந்துவிட்டார்கள்....

அவர்களின் இருப்பை காட்டிகொள்ளவே அவர்கள் இணையபுரட்சி செய்ய வந்துவிட்டார்கள்... கொள்கை பெரிதென்றால் அமெரிக்க ஏகாதிபத்தியமும் & முதலாளித்துவமும் கொடுத்த blogger & wordpress ஐ ஏன் பயன்படுத்தவேண்டும்...

Renga said...

//இவர்கள் கையில் அதிகாரம் இருந்தால் எப்படி இருக்கும்.//

பஸ் ஸ்டாண்டில் இருக்கும் பொது கழிப்பறைஐ கூட இவர்களால் நிர்வாஹம் பண்ண முடியாது....

குமரன் said...

கொஞ்சம் யோசித்து... உருப்படியா எதிர்வினை ஆற்றுங்கள் இரும்புத்திரை. இந்த பதிவுக்கு என் ஓட்டு மைனஸ் தான்.

ராவணன் said...

மகஇக கும்பல் என்ற வினவு கும்பல் என்கின்ற மருதையன் என்ற பாப்பானின் அடிவருடி கும்பல்
என்று அழைக்கப்படும் இந்த
மகஇக கும்பல் என்ற வினவு கும்பல் என்கின்ற மருதைய்யன் என்ற பாப்பானின் கீழ் இயங்கும் கும்பல் இந்த மகஇக கும்பல் என்ற வினவு கும்பல்...அய்யோ...
இந்த மருதையனை என்கவுண்டரில் போட மாட்டார்களா..?
80..களில் இந்த கும்பலைச் சேர்ந்தவன் என்னிடம் மாட்டினான்...
சரியாக வாங்கினான்...இப்பவும் மருதையனுக்கு உருவுகின்றானோ என்னவோ..?
இந்த மகஇக கும்பலின் த(லி)வன் மருதைய்யனைப் பற்றிய பல ரகசியங்கள் என்னிடம் உள்ளன.

மங்களூர் சிவா said...

நான் தமிழ்நாட்டில் இல்லை என்றாலும் தமிழ்நாட்டில் அறிந்த ஒரே கட்சி ம.க.இ.க-தான்















இது வஞ்ச புகழ்சியல்ல இயல்பு நவிற்சியே

Kபாலி said...

இந்த இடுகைக்கு ஆதரவு மற்றும் எதிர் வாக்களித்தவர்கள்


cibi1 anijaya abiappa vaanampadigal maildhinesh thiru82gmailcom Priya udanpirappu autokaaren helloasir muthu83 adhusari irumbuthirai malarmaha nondhakumar thandora robin palayking rajagopalsm mglrssr cibi1 kavithai irumbuthirai sharatha munush sathurangam kavitha23 chandran ilanthendral palayking helloasir